இந்திய அணியில் விரிதிமன் சஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்?

228

இங்கிலாந்து அணிக்கெதிராக அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடதுகை பெருவிரல் உபாதைக்கு உள்ளாகியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான விரிதிமன் சஹா விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக இந்திய கிரிக்கெட் சபையின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குல்தீப் சுழல், ரோஹித்தின் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் அபார…

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. முதலில் அயர்லாந்துடன் இரண்டு T-20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 2-0 என வெற்றிபெற்றதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான T-20 தொடரையும் 2-1 என வெற்றி கொண்டது.

தற்போது இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், ஒரு நாள் தொடரிலும் 1-1 என சமனிலை வகிக்கின்றது. ஒரு நாள் தொடரையடுத்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

முக்கியமாக டெஸ்ட் தொடரில் சோபிக்க வேண்டும் என இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, தங்களுடைய வீரர்களின் உடற்தகுதியில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது. உடற்தகுதியை காரணமாக காட்டி, ஐ.பி.எல். தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவை இந்திய தேர்வுக்குழு ஒரு நாள் மற்றும் T-20 குழாம்களில் இருந்து உதறித்தள்ளியது. அவருடன் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சமியும் இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்னவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நேற்று (15)…

ஐ.பி.எல். தொடரின் போது இடதுகை பெருவிரல் உபாதைக்கு உள்ளாகியிருந்த விரிதிமன் சஹா இன்றும் பூரண குணமடையவில்லை எனவும், இதனால் அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரிதிமன் சஹா ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இதன் போது உபாதைக்குள்ளாகிய சஹாவுக்கு, இரண்டாவது தகுதி ஆட்டம் (குவாலிபையர்) மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்தும் உபாதையால் அவதிப்பட்ட சஹா சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதிலும் சிக்கலை எதிர்கொண்டார்.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலிருந்தும் சஹா நீக்கப்பட, அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் காப்பாளராக அழைக்கப்பட்டார்.

குளோபல் T20 கிண்ணம் கிறிஸ் கெய்லின் வான்கூவர் நைட்ஸ் அணிக்கு

கனடா கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்த…

இப்போதும் அதே நிலை தொடர்ந்து வருகின்றது. சஹா உபாதையில் இருந்து சரியான நேரத்தில் பூரண குணமடைவார் என்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது. இதுவரையிலும் கையில் பிளாஸ்டர்அணிந்துக்கொண்டுதான் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இதனால் டெஸ்ட் தொடரில் அவர் முழுமையாக விளையாடுவாரா? என்பது கேள்விக்குறிதான். அது மாத்திரமின்றி சஹா சர்வதேச போட்டிகளில் விளையாடி மாதங்கள் கடந்துவிட்டன. அவருடைய தொடர்ச்சியான பங்களிப்பையும் நாம் அவதானம் செலுத்தி வருகின்றோம். இதனால் அவருக்கு பதிலாக மீண்டும் தினேஷ் கார்த்திக் அணிக்குள் உள்வாங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.” என இந்திய கிரிக்கெட் சபையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும், விரிதிமன் சஹா அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றால் அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு எதிர்வரும் 25ம் திகதி சசெக்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடுவது. இந்த பயிற்சிப் போட்டியில் விளையாடுவதன் மூலமே சஹா தனது வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும். அப்படியில்லை என்றால் அவரின் இடத்துக்கு தினேஷ் கார்த்திக் மீண்டும் அழைக்கப்படுவார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை (17) நிறைவடையவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் சபை டெஸ்ட் தொடருக்கான இறுதி அணிக் குழாத்தை அறிவிக்கவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<