Home Tamil இலகுவான வெற்றியுடன் தொடரை 2-1 என கைப்பற்றியது இலங்கை!

இலகுவான வெற்றியுடன் தொடரை 2-1 என கைப்பற்றியது இலங்கை!

Zimbabwe tour of Sri Lanka 2024

206
Zimbabwe tour of Sri Lanka 2024

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் வனிந்து ஹஸரங்க உட்பட பந்துவீச்சாளர்களின் சிறந்த பிரகாசிப்புகளின் உதவியுடன் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவுசெய்திருந்தது. சுகயீனம் காரணமாக சரித் அசலங்க அணியிலிருந்து நீக்கப்பட்டதுடன், குசல் பெரேராவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

>>யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த 18 வயது இந்திய வீரர்

இவர்கள் இருவருக்கும் பதிலாக தனன்ஜய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி முதல் விக்கெட்டை ஒரு ஓட்டத்துக்கு இழந்திருந்த போதும், பிரைன் பென்னட் அணிக்காக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

இவர் வேகமாக ஓட்டங்களை குவித்து 12 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களை விளாசினார். எனினும் இவரின் ஆட்டமிழப்பு தொடரந்து ஜிம்பாப்வே அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது.

பவர்பிளே ஓவர்கள் நிறைவில் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஜிம்பாப்வே அணி அடுத்த 30 ஓட்டங்களுக்கு மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே 14.1 ஓவர்கள் நிறைவில் ஜிம்பாப்வே அணி 82 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் அபாரம் காண்டிபித்த வனிந்து ஹஸரங்க 4 விக்கெட்டுகளை சாய்க்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்காக குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறந்த ஆரம்பங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 10.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

>>WATCH – இலங்கை கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ள மர்பின் அபினாஷ்! | Sports Field

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பெதும் நிஸ்ஸங்க 23 பந்துகளில் 39 ஓட்டங்களை விளாசியதுடன், குசல் மெண்டிஸ் 33 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்ததுடன், தொடரை 2-1 என வெற்றிக்கொண்டது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க << 

Result


Sri Lanka
88/1 (10.5)

Zimbabwe
82/10 (14.1)

Batsmen R B 4s 6s SR
Tinashe Kamunhukamwe c Kusal Mendis b Maheesh Theekshana 12 14 1 0 85.71
Craig Ervine c Sadeera Samarawickrama b Angelo Mathews 0 1 0 0 0.00
Brian Bennett c Wanidu Hasaranga b Angelo Mathews 29 12 7 0 241.67
Sean Williams c & b Dhananjaya de Silva 15 17 0 0 88.24
Sikandar Raza c Maheesh Theekshana b Dilshan Madushanka 10 12 1 0 83.33
Tony Munyonga c Dhananjaya de Silva b Wanidu Hasaranga 4 6 0 0 66.67
Clive Madande c Dasun Shanaka b Maheesh Theekshana 5 10 0 0 50.00
Luke Jongwe c Dilshan Madushanka b Wanidu Hasaranga 2 7 0 0 28.57
Wellington Masakadza lbw b Wanidu Hasaranga 3 5 0 0 60.00
Richard Ngarava b Wanidu Hasaranga 0 1 0 0 0.00
Blessing Muzarabani not out 0 0 0 0 0.00


Extras 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 82/10 (14.1 Overs, RR: 5.79)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 15 2 7.50
Dilshan Madushanka 2 0 22 1 11.00
Maheesh Theekshana 3.1 0 14 2 4.52
Dushmantha Chameera 2 0 13 0 6.50
Wanidu Hasaranga 4 0 15 4 3.75
Dhananjaya de Silva 1 0 1 1 1.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka not out 39 23 5 1 169.57
Kusal Mendis b Sean Williams 33 27 4 1 122.22
Dhananjaya de Silva not out 15 15 2 0 100.00


Extras 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 88/1 (10.5 Overs, RR: 8.12)
Bowling O M R W Econ
Richard Ngarava 3 0 22 0 7.33
Blessing Muzarabani 2 0 16 0 8.00
Wellington Masakadza 1 0 11 0 11.00
Sikandar Raza 2.5 0 25 0 10.00
Sean Williams 2 0 13 1 6.50