முத்தரப்பு T20I தொடரில் ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக ஜிம்பாப்வே

Pakistan Cricket

87

அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக ஜிம்பாப்வே அணி விளையாடும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் போர்ப் பதற்றம் இருந்துவரும் நிலையில், 48 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் தலைநகரான ரனாவில் பாகிஸ்தான் வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் உள்ளூர் போட்டியொன்றில் விளையாடிய பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்த கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 இளம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலியாகினர். இது ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நவம்பர் 17ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுடன் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெற இருந்த முத்தரப்பு T20I கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது 

இது தொடர்பில் ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் உயிர்த்தியாகம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மாகாண தலைநகர் ஷரானாவில் ஒரு நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடன் மேலும் 5 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். 

துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் தியாகத்துக்கு ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் சபை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆப்கன் விளையாட்டு சமூகத்துக்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்துக்கும் இது ஒரு பெரிய இழப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு T20I கிரிக்கெட் தொடரில் இருந்து ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் அணி விலகுகிறது. தியாகிகளுக்கு அல்லா உயர்ந்த பதவிகளை வழங்குவாராக. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவன் அருள்புரிவானாகஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல,இந்த வீரர்களின் உயிரிழப்பு தொடர்பில் ICC மற்றும் BCCI ஆகியவையும் தமது கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளன. 

எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானின் அறிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த நிலைமை குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிவில்லை, ஆனால், ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக வேறொரு அணியுடன் திட்டமிட்டபடி முத்தரப்பு T20I தொடர் நடைபெறும் என்று ESPNcricinfoவிடம் தெரிவித்துள்ளது 

இதன்படி, முத்தரப்பு T20I தொடரானது ராவல்பிண்டியில் ஜிம்பாப்வேபாகிஸ்தான் அணிகளுடனான போட்டியுடன் ஆரம்பமகி, இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே மைதானத்தில் ஜிம்பாப்வேஇலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும். அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள அனைத்துப் போட்டிகளும் லாகூரின் கடாஃபி மைதானத்தில் நடைnறும்  

இதேவேளை, இந்த முத்தரப்புத் T20I தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<