இலங்கை A அணிக்காக அரைச்சதம் அடித்த கமில் மிஷார

Pakistan A tour of Sri Lanka 2021

137

பாகிஸ்தான் A அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை பலோ-ஓன் (Follow-On) செய்திருக்கும் இலங்கை A அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் வகையில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கை A மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையால் 30 ஓவர்கள் மாத்திரம் நடைபெற்றது.

பல்லேகலயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று (06) இலங்கை A அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

இதில் 64 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை A அணி, வெறும் 3 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து கடைசி விக்கெட்டையும் பறிகொடுததது. இதனால் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 67 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து 327 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்  தனது இரண்டாவது இன்னிங்ஸை பலோ-ஒன் செய்த இலங்கை A அணி 30 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷங்க, குர்ராம் ஷஸாத்தின் பந்துவீச்சில் மொஹமட் ஹாரிஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிபுன் தனன்ஜய 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும், அடுத்து களமறங்கிய அணித்தலைவர் சதீர சமரவிக்ரம, ஆரம்ப வீரர் கமில் மிஷாரவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஓட்டங்களைக் குவிக்க போட்டி மீண்டும் மழையினால் தடைப்பட்டது.

எனவே, இன்றைய போட்டிக்கும் மழை தொடர்ச்சியாக தடங்கலை ஏற்படுத்த, மூன்றாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை A அணி, மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், 225 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை A அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நான்காவது மற்றும் கடைசி நாளான நாளை (27) தனது எஞ்சிய 8 விக்கெட்டுக்களையும் காத்துக்கொண்டு ஆட்டநேரம் முடியும் வரை துடுப்பெடுத்தாட வேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.

கமில் மிஷார 53 ஓட்டங்களுடனும், சதீர சமரவிக்ரம19 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் A அணி – 394/10 (106) – அப்துல்லாஹ் சபீக் 117, அங்கா சல்மான் 103, கம்ரான் குலாம் 45, நஷீம் ஷா 31, சாமிக்க குணசேகர 6/83, ஹிமேஷ் ராமநாயக்க 1/56

இலங்கை A அணி – 67/10 (22) – சுமிந்த லக்ஷான் 29, நிபுன் தனன்ஜய 17, நஷீம் ஷா 4/28, குர்ராம் ஷஸாத் 3/10, அர்ஷாத் இக்பால் 2/14

இலங்கை A அணி – 102/2 (28.3) – கமில் மிஷார 53*, சதீர சமரவிக்ரம 19*, நிஷான் மதுஷங்க 12, அங்கா சல்மான் 1/17

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<