வலைப்பந்துவீச்சாளரை அணியில் இணைத்த சன்ரைஸர்ஸ்!

Indian Premier League 2021

141
Umran Malik
Sunrisers Hyderabad twitter

சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான தங்கராசு நடராஜனுக்கு பதிலாக தற்காலிக மாற்று வீரராக உம்ரான் மலிக் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் அணியின் வீரரான நடராஜனுக்கு, கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, விஜய் சங்கர் உட்பட, இவருடன் நெருங்கிய தொடர்புக்கொண்டவர்கள் என குறிப்பிடப்பட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

>> கொல்கத்தா அணித்தலைவர் மோர்கனுக்கு 24 இலட்சம் அபராதம்

அத்துடன், அந்த அணியின் மற்றுமொரு வீரரான ஷர்பேன் ரதபோர்ட், அவருடைய தந்தை உயிரிழந்துள்ளதால், மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளார். இவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் வேகப் பந்துவீச்சாளரான உம்ரான் மலிக்கை சன்ரைஸர்ஸ் அணியில் இணைத்துள்ளது. இவர்,  சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் வலைப்பந்துவீச்சாளரான செயற்பட்டுவந்த நிலையில், அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

IPL விதிமுறையின் படி, பிரதான வீரர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து அணியின் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இணையும் வரை, தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள வீரர், அணிக்கான போட்டிகளில் விளையாட முடியும். இதன்படி, நடராஜன் அணியில் இணையும் வரை, உம்ரான் மலிக் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உம்ரான் மலிக் இதுவரையில் ஒரு லிஸ்ட் ஏ போட்டி மற்றும் ஒரு T20 போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தார். குறித்த ஒரு T20 போட்டியில், உம்ரான் மலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி, இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில், ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டு புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<