2024 T20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் அனைத்து அணிகளும் உறுதி

T20 World Cup 2024

611

அடுத்த ஆண்டு 2024 மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. 

>> இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீடிப்பு

ஆபிரிக்க பிராந்திய அணிகளுக்கான தகுதிகாண் சுற்றுத் தொடரின் ஊடாக உகண்டா T20 உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் இறுதி நாடாக தெரிவாகியதன் மூலமே, T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன 

உகண்டா அணி இந்த தகுதிகாண் தொடரில் தமது இறுதி லீக் போட்டியில் ருவாண்டவிற்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் அவ்வணிக்கு T20 உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்கும் என நிலைமைகள் காணப்பட்டிருந்த போது ருவாண்டாவிற்கு எதிராக 09 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்து, இதுவரை உலகக் கிண்ணத் தொடர் எதிலும் ஆடாத அவ்வணி தமது கன்னி உலகக் கிண்ண வாய்ப்பினை உறுதி செய்திருக்கின்றது

உகண்டா தெரிவாகிய நிலையில் T20 உலகக் கிண்ணத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினை ஏனைய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே இழந்திருக்கின்றது. டெஸ்ட் அந்தஸ்தினைக் கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணி இந்த T20 உலகக் கிண்ணத் தொடரோடு மாத்திரமின்றி ICC இன் முன்னணி தொடர்களான ஒருநாள் உலகக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் என்பவற்றில் ஆடும் வாய்ப்புக்களை தொடர்ச்சியாக இழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

>> இலங்கை அணி அடுத்த ஆண்டு விளையாடவுள்ள தொடர்களின் விபரம் வெளியானது

இதேநேரம் ஆபிரிக்க பிராந்திய அணிகளுக்கான தொடர் மூலம் ஏற்கனவே T20 உலகக் கிண்ணத் தொடருக்கு நமீபியா தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது 

T20 உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் அணிகள்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<