கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் விர்திமான் சஹாவுக்கு அவரின் தந்தையான ப்ராசான்தா பிடியெடுப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், விக்கெட் காப்பாளர் விர்திமான் சஹாவும் தன்னுடைய வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவுக்கு வெளியில் நடக்கும் சாத்தியம்?
ஆயினும் தான் தொடர்ந்து பிடியெடுப்பு பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருவதாகவும் போட்டிகளில் விளையாட தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சஹா கூறுகையில், ”எனது குடியிருப்பில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொதெல்லாம் விக்கெட் காப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். சுவற்றில் பந்தை வீசி பிடியெடுப்பு பயிற்சி மேற்கொள்வேன். சில நேரத்தில் என் தந்தை எனக்கு உதவுவார். அதற்கான இடவசதி அங்கு உள்ளது.
காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது என்னால் சில மாதங்களுக்கு பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் தற்போது சிறப்பாக பயிற்சி செய்ய முடிகிறது.
ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட்டுடன் தொடர்பு இல்லாமல் போவதை நான் விரும்பவில்லை. அதனால் குடியிருப்பு உள்ளேயே பயிற்சியை ஆரம்பித்து விட்டேன். மாலை நேரத்தில் உள்ளே வசிக்கும் மக்களுக்கு நடை பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் அந்த நேரத்தில் நான் பயிற்சி மேற்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விக்கெட் காப்பாளராக செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை விர்திமான் சஹா வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் இறுதியாக நடைபெற்ற நியூஸிலாந்திற்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், போட்டிகளுக்கு தன்னை எப்போதும் தயாராக வைத்துக் கொள்வது மட்டுமே தன்னுடைய கடமை என்றும், தேர்வுக் குழுவுக்கு என்று சில வழிமுறைகள் இருக்கும் என்றும் அதுகுறித்து தான் கவலை கொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வீரர்கள் சர்வதேச போட்டிகளுக்கு தயாராக 6 முதல் 8 வாரங்கள் தேவைப்படும் என்று பயிற்சியாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள சஹா, அது அவரவர் தனிப்பட்ட மனநிலையை பொறுத்தது என்றும் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமிலும் அதிகம் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி
”பந்துவீச்சாளர்களுக்கு வேண்டுமானால், இந்த காலஅவகாசம் தேவைப்படும். ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர்களுக்கு இது அவசியம் இல்லை.
அத்துடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக சில போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் சிறந்தது என நினைக்கிறேன். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதை பொறுத்து தான் எல்லாம் உள்ளது. எனினும், அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கு முன் இந்த நிலை நிச்சயமாக சரியாகும்” என நினைக்கிறேன் என தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<