பங்களாதேஷ் அணிக்கு திரும்பிய தமீம் இக்பால்!

England tour of Bangladesh 2023

142

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளுக்குமான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள குழாத்தில் முழுநேர அணித்தலைவர் தமிம் இக்பால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு

தமிம் இக்பால் உபாதை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இறுதியாக நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடினாலும், இங்கிலாந்து தொடருக்காக கடைசி இரண்டு போட்டிகளிலும் இவர் விளையாடவில்லை.

அதேநேரம் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பிரகாசித்திருந்த தவ்ஹீட் ரிடோய் முதன்முறையாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தைஜூல் இஸ்லாம் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு மீள்வருகையை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய யசீர் அலி, அனாமுல் ஹக் மற்றும் நசும் அஹ்மட் ஆகிய வீரர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் யசீர் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், பயிற்சிப்போட்டிகளின் பிரகாசிப்பின் அடிப்படையில் மீண்டும் அணிக்குள் வரலாம் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

ரதெல்ல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி!

மேற்குறித்த வீரர்களுடன் லிடன் டாஸ், சகீப் அல் ஹஸன், முஷ்பிகூர் ரஹீம், மஹ்மதுல்லாஹ் மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகிய முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

தமிம் இக்பால் (தலைவர்), லிடன் டாஸ், நஜ்முல் ஹொசைன் செண்டோ, சகீப் அல் ஹஸன், முஷ்பிகூர் ரஹீம், அபீப் ஹொசைன், மஹ்மதுல்லாஹ், மெஹிதி ஹாஸன் மிராஷ், முஷ்தபிசூர் ரஹ்மான், டஸ்கின் அஹ்மட், ஹஸன் மஹ்மூட், எபடொட் ஹொஸைன் சௌத்ரி, தைஜூல் இஸ்லாம், தவ்ஹீட் ரிடோய்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<