துடுப்பு மட்டையை வீசி எறிந்த கிறிஸ் கெய்லுக்கு நேர்ந்த கதி

346
BCCI

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு ஓட்டத்தினால் சதத்தைத் தவறவிட்ட பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல், களத்தில் துடுப்பு மட்டையை வீசி எறிந்தார். 

இந்த நிலையில். போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கிறிஸ் கெய்லுக்கு இந்தியன் ப்ரீமியர் லீக் (.பி.எல்) நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது

அபுதாபியில் நேற்று (3)) நடைபெற்ற .பி.எல் T20i போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீழ்த்தியது

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 3ஆவது இலக்க வீரராகக் களமிறங்கி விளையாடிய கிறிஸ் கெய்ல் தனது அதிரடியான ஆட்டத்தில் சதத்தை நெருங்கினார்

T20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை கடந்த க்ரிஸ் கெயில்

குறிப்பாக, இந்த தொடரில் மூன்றாவது முறையாக அரைச்சதம் கடந்த அவர், T20i அரங்கில் 1001 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டி உலக சாதனை படைத்தார்.

எனினும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய 20ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் கால்காப்பில் பட்டு பந்து விக்கெட்டை தாக்க, கெய்ல் 99 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

சதத்தை நோக்கி நகர்ந்த கிறிஸ் கெய்லுக்கு 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது பெருத்த ஏமாற்றத்தை அளித்ததால், கையில் இருந்த துடுப்பு மட்டையை ஆடுகளத்தில் வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்

இருப்பினும், மைதானத்தை விட்டு வெளியே செல்லும்போது, ஆர்ச்சருக்குக் கைகுலுக்கி தனது விளையாட்டு மனப்பாங்கை வெளிப்படுத்த கிறிஸ் கெய்ல் தவறவில்லை.  

Video – நடக்காமலே Twist களை தரும் LPL | Cricket Galatta Epi 43

இந்த நிலையில், கிறிஸ் கெய்ல் துடுப்பு மட்டையை வீசி எறிந்தது குறித்து கள நடுவர்கள், போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். களத்தில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்ட கிறிஸ் கெய்ல் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

எனினும், .பி.எல் தொடரின் ஒழுக்க விதிகளை மீறி களத்தில் செயல்பட்ட கிறிஸ் கெய்லுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பதாக .பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

ஐ.பி.எல் ஒழுக்கவிதிகள் 2.2இன் படி விதிமுறை ஒன்றுக்கான குற்றத்தை கிறிஸ் கெய்ல் செய்துள்ளார். அந்தக் குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார் என்று .பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல இனிவரும் போட்டிகளில் இவ்வாறு நடக்கக் கூடாது என்று கிறிஸ் கெய்லுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<