மகளிருக்கான இரண்டாம் பிரிவின் பிரீமியர் லீக் அரையிறுதிச் சுற்றுக்கு நான்கு அணிகள் தெரிவு

252
Thihariya & Kotte women into Division II semi-finals

மகளிருக்கான இரண்டாம் பிரிவுக்கான (டிவிஷன் 2) பிரீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் குருணாகலை விளையாட்டுக் கழகம், கோட்டை விளையாட்டுக் கழகம், பொல்கஹவெல விளையாட்டுக் கழகம் மற்றும் திஹாரிய விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.  

குழு ‘A’

திஹாரிய விளையாட்டுக் கழக மகளிர் அணி தமது அனைத்து குழு மட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டது.

திஹாரிய அணி முதல் போட்டியில் கனேமுள்ள விளையாட்டுக் கழகத்தை சந்தித்தது. ஏனைய போட்டிகளை விட விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் திஹாரிய அணி 1-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொண்டது.

அடுத்து ஹட்டன் போர்டய்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் மொரட்டுவ DMFL விளையாட்டுக் கழக அணிகள் மோதிக் கொண்டதுடன், இப்போட்டியில் போர்டய்ஸ் அணி 2-0 என வெற்றி பெற்றது.

அன்றைய தினம் பிற்பகல் போர்டய்ஸ் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் மிகவும் இலகுவான வெற்றியை பதிவு செய்து கொண்ட திஹாரிய விளையாட்டுக் கழகம் 10 கோல்களைப் பெற எதிரணியால் எந்த ஒரு கோலையும் பெற முடியாமல் போனது.

அதேபோன்று, மொரட்டுவ DMFL விளையாட்டுக் கழக அணியை துவம்சம் செய்த கனேமுள்ள விளையாட்டுக் கழகம் 13-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக் கொண்டது. இதன்படி திஹாரிய விளையாட்டுக் கழகம் குழுவில் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

போட்டி முடிவுகள்

திஹாரிய விளையாட்டுக் கழகம் 1-0 கனேமுள்ள விளையாட்டுக் கழகம்

ஹட்டன் போர்டய்ஸ் விளையாட்டுக் கழகம் 2-0 மொரட்டுவ DMFL விளையாட்டுக் கழகம்

திஹாரிய விளையாட்டுக் கழகம் 10-0 ஹட்டன் போர்டய்ஸ் விளையாட்டுக் கழகம்

கனேமுள்ள விளையாட்டுக் கழகம் 13-0 மொரட்டுவ DMFL விளையாட்டுக் கழகம்

குழு ‘B’

இக்குழுவின் நான்கு அணிகளில் மூன்று அணிகளே போட்டிகளில் கலந்து கொண்டன. முதல் போட்டியில் அம்பலங்கொட விளையாட்டுக் கழகத்தை சுலபமாக தோற்கடித்த கோட்டை விளையாட்டுக் கழகம் 5-0 என்ற கோள்கள் அடிப்படையில் வெற்றியை சுவீகரித்தது.

எனினும் அம்பலங்கொட விளையாட்டுக் கழகம், இரத்தினபுரி விளையாட்டுக் கழகத்துடனான தமது இரண்டாவது போட்டியில் 3-1 என வென்றது.

அடுத்து இரத்தினபுரி அணியுடன் இடம்பெற்ற போட்டியில், கோட்டை விளையாட்டுக் கழகம் மீண்டும் 5-0 என வெற்றியை பதிவு செய்து குழுவில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது.

போட்டி முடிவுகள்

கோட்டை விளையாட்டுக் கழகம் 5-0 அம்பலங்கொட விளையாட்டுக் கழகம்

அம்பலங்கொட விளையாட்டுக் கழகம் 3-1 இரத்தினபுரி விளையாட்டுக் கழகம்

கோட்டை விளையாட்டுக் கழகம் 5-0 இரத்தினபுரி விளையாட்டுக் கழகம்

லீக் முறையிலான போட்டிகள்

இதேவேளை அரையிறுதிகளுக்கான ஏனைய இரண்டு அணிகளை தெரிவு செய்ய நான்கு அணிகளை கொண்ட லீக் முறையிலான சுற்று நடத்தப்பட்டது.

முதல் போட்டியில் மது மாதா விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்த பொல்கஹவெல விளையாட்டுக் கழகம் 2-1 என வெற்றியை பெற்றதுடன், அநுராதபுர விளையாட்டுக் கழகத்தை குருணாகலை விளையாட்டுக் கழகம் 6-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி கொண்டது.

சுற்றின் தீர்க்கமான போட்டியில் பொல்கஹவல அணியை 2-0 என தோற்கடித்த குருணாகலை அணி, முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. மது மாதா விளையாட்டுக் கழகம் மற்றும் அநுராதபுர விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டி 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது.

அடுத்து பொல்கஹவெல விளையாட்டுக் கழகம் அநுராதபுர அணியை மூன்று கோல் வித்தியாசத்தில் தோற்கடித்ததுடன், சுற்றின் இறுதிப் போட்டியில் குருணாகலை விளையாட்டுக் கழகம் 4-2 என்ற புள்ளி அடிப்படையில மது மாதா விளையாட்டுக் கழக அணியை வென்றது.

போட்டி முடிவுகள்

மது மாதா விளையாட்டுக் கழகம் 1 – 2 பொல்கஹவெல விளையாட்டுக் கழகம்

அநுராதபுர விளையாட்டுக் கழகம் 0 – 6 குருணாகலை விளையாட்டுக் கழகம்

பொல்கஹவெல விளையாட்டுக் கழகம் 0 – 2 குருணாகலை விளையாட்டுக் கழகம்

மது மாதா விளையாட்டுக் கழகம் 1 – 1 அநுராதபுர விளையாட்டுக் கழகம்

பொல்கஹவெல விளையாட்டுக் கழகம் 3 – 0 அநுராதபுர விளையாட்டுக் கழகம்

குருணாகலை விளையாட்டுக் கழகம்  4 – 2 மது மாதா விளையாட்டுக் கழகம்

எனவே, முதல் கட்ட போட்டிகள் நிறைவில், நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிகள் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் களணிய கால்பந்து மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

அரையிறுதிப் போட்டி அட்டவணை  

ஜனவரி 21ஆம் திகதிகுருணாகலை விளையாட்டுக் கழகம் எதிர் கோட்டை விளையாட்டுக் கழகம்மு.. 08.30 – களனி காற்பந்தாட்ட மைதானம்

ஜனவரி 22ஆம் திகதிபொல்கஹவெல விளையாட்டுக் கழகம் எதிர் திஹாரிய விளையாட்டுக் கழகம்மு.. 08.30 – களனி காற்பந்தாட்ட மைதானம்

தமிழில் கால்பந்து செய்திகளை படிக்க