மகளிருக்கான தேசிய சுப்பர் லீக் T20 தொடர் ஜனவரியில் ஆரம்பம் 

Women's National Super League T20 2026

8
Women's National Super League T20 2026

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான தேசிய சுப்பர் லீக் T20 2026 போட்டித்தொடர் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் டீம் ப்ளூஸ், டீம் க்ரேஸ், டீம் க்ரீன்ஸ் மற்றும் டீம் ரெட்ஸ் என நான்கு அணிகள் சம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளன.

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் எதிரணிகளை இரு தடவைகள் சந்திக்கும் வகையில் பரபரப்பான லீக் போட்டிகள் அமையும். அதன்படி, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஜனவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த சுவாரஸ்யமான T20 தொடர் BRC மைதானம், தர்ஸ்டன் கல்லூரி மைதானம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம் மற்றும் பி. சாரா ஓவல் என நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<