Home Tamil ஆசியக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

ஆசியக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

853

மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஆசியக் கிண்ண T20 தொடரில் இன்று (01) இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிடம் 41 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியிருக்கின்றது.

>> லெஜன்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

அதேநேரம் இந்த தோல்வி காரணமாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் மோசமான ஆரம்பத்தினைப் பெற்றிருக்கின்றது.

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு ஆசியக் கிண்ணத் தொடரில் முதல் போட்டியாக அமைந்த இந்த மோதல் பங்களாதேஷின் சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணியின் தலைவி சாமரி அத்தபத்து முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்தியாவிற்கு வழங்கினார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜெமைமா ரொட்ரிக்கஸ் அரைச்சதம் பெற்று 53 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களை எடுத்தார். அதேநேரம் அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர் 33 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் ஒசாதி ரணசிங்க 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 151 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 109 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹாசினி பெரேரா அதிகபட்சமாக 30 ஓட்டங்களை எடுத்திருக்க, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்ட்ரக்கார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

>> T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகுகிறார் பும்ரா?

போட்டியின் ஆட்டநாயகியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஜெமைமா ரொட்ரிக்கஸ் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


India Women
150/6 (20)

Sri Lanka Women
109/10 (18.2)

Batsmen R B 4s 6s SR
Shafali Verma c Malsha Shehani b Oshadi Ranasinghe 10 11 1 0 90.91
Smriti Mandhana c Nilakshi de Silva b Sugandika Kumari 6 7 1 0 85.71
Jemimah Rodrigues b Chamari Athapaththu 76 53 11 1 143.40
Harmanpreet Kaur st Anushka Sanjeewani b Oshadi Ranasinghe 33 30 2 1 110.00
Dayalan Hemalatha not out 13 10 0 0 130.00
Richa Ghosh lbw b Oshadi Ranasinghe 9 6 0 1 150.00
Pooja Vastrakar run out (Anushka Sanjeewani) 1 2 0 0 50.00
Deepti Sharma not out 1 1 0 0 100.00


Extras 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 150/6 (20 Overs, RR: 7.5)
Bowling O M R W Econ
Sugandika Kumari 4 0 26 1 6.50
Oshadi Ranasinghe 4 0 32 3 8.00
Achini Kulasuriya 3 0 17 0 5.67
Malsha Shehani 2 0 18 0 9.00
Inoka Ranaweera 4 0 34 0 8.50
Kavisha Dilhari 2 0 14 0 7.00
Chamari Athapaththu 1 0 8 1 8.00


Batsmen R B 4s 6s SR
Harshitha Samarawickrama run out (Smriti Mandhana) 26 20 5 1 130.00
Chamari Athapaththu c Renuka Singh b Deepti Sharma 5 11 1 0 45.45
Malsha Shehani run out (Deepti Sharma) 9 6 1 0 150.00
Hasini Perera c Radha Yadav b Deepti Sharma 30 32 3 0 93.75
Nilakshi de Silva lbw b Pooja Vastrakar 3 5 0 0 60.00
Kavisha Dilhari c Renuka Singh b Pooja Vastrakar 1 8 0 0 12.50
Anushka Sanjeewani lbw b Radha Yadav 5 9 0 0 55.56
Oshadi Ranasinghe c Sneh Rana b Dayalan Hemalatha 11 10 1 0 110.00
Sugandika Kumari c Smriti Mandhana b Dayalan Hemalatha 4 3 0 0 133.33
Inoka Ranaweera not out 1 3 0 0 33.33
Achini Kulasuriya st Richa Ghosh b Dayalan Hemalatha 1 4 0 0 25.00


Extras 13 (b 4 , lb 0 , nb 1, w 8, pen 0)
Total 109/10 (18.2 Overs, RR: 5.95)
Bowling O M R W Econ
Renuka Singh 2 0 20 0 10.00
Deepti Sharma 4 0 15 2 3.75
Sneh Rana 4 0 28 0 7.00
Radha Yadav 3 0 15 1 5.00
Pooja Vastrakar 3 0 12 2 4.00
Dayalan Hemalatha 2.2 0 15 3 6.82



முடிவு – இந்திய மகளிர் அணி 41 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<