6ஆவது டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்னும் 1 போட்டியே மீதமுள்ளது. 35 போட்டிகளைக் கொண்ட  டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் 34வது போட்டியான 2ஆவது அரையிறுதிப் போட்டி நேற்று மும்பாய் வெங்கடெ  மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் போட்டியை நடாத்தும் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி டெரன் சமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து விளையாடியது.

போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி முதலில் இந்திய அணியை துடுப்பாட அழைப்பு விடுத்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன ஷிகர் தவான் மற்றும்  யுவராஜ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக அஜின்கியா ரஹானே மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகளின் விபரம்,

இந்திய அணி :

மஹேந்திர சிங் டோனி (தலைவர்) , ரோஹித் சர்மா, அஜின்கியா ரஹானே , விராட் கொஹ்லி , சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின், அசிஷ் நெஹ்ரா,ஜஸ்ப்ரிட் பும்ரா.

மேற்கிந்திய தீவுகள் அணி :

டெரன் சமி (தலைவர்) ,  க்றிஸ் கெயில், ஜொன்சன் சார்ல்ஸ், மார்லன் செமுவல்ஸ், லென்டல் சிமன்ஸ் , டினேஷ் ராம்டின், டுவேயின் ப்ராவோ, என்டர் ரசல், கார்லஸ் பரத்வைட், சாமுவேல் பத்ரி, சுலிமன் பென்

நடுவர்கள் : இயன் குட் மற்றும் ரிச்சர்ட் கெட்ல்ப்ரோ

இந்நிலையில் டெரன் சமியின் அழைப்பின் படி இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மாவும் அஜின்கியா ரஹானேயும் களம் இறங்கி இந்திய அணிக்கு சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தார்கள். அதிரடியாக ஆடிய  ரோஹித் சர்மா 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக  43 ஓட்டங்களைப் பெற்று சாமுவேல் பத்ரி வீசிய  பந்து வீச்சில் எல்.பி. டப்ளியு முறையில் ஆட்டம் MS Dhoni and Darren Sammyஇழந்தார். முதல் விக்கட் 62 ஓட்டங்களில் வீழ்த்தப்பட இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராத் கொஹ்லி களம் இறங்கினார். அவர்  அஜின்கியா ரஹானேயோடு இணைந்து இந்திய அணியை சிறந்த நிலைக்கு எடுத்துச் சென்றார் . பின் இரண்டாவது விக்கட்டுக்காக 66 ஓட்டங்களைப் பகிர்ந்த பின்  நிதானமாக ஆடிய ரஹானே 35 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து மிக அபாரமாக விளையாடிய விராத் கொஹ்லி மேற்கிந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எல்லா திசையிலும் பதம் பார்த்தார்.  இறுதியில் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது இந்திய அணி. விராத் கொஹ்லி அதிக பட்சமாக ஆட்டம் இழக்காமல் 47 பந்துகளில் பதினாறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 89  ஓட்டங்களைப் பெற்றார்.மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் சாமுவேல் பத்திரி மற்றும் என்டர் ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 193 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி  என்ற இலக்கோடு மேற்கிந்திய தீவுகள்  அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான க்றிஸ் கெயில் மற்றும் ஜொன்சன் சார்ல்ஸ் ஜோடி களமிறங்கியது. ஆனால் அவர்களால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. முதல் விக்கட்டாக அதிரடி ஆட்டக்காரர் க்றிஸ் கெய்ல் 5 ஓட்டங்களோடு  பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆகி களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மார்லன் சாமுவல்ஸ்  8 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நெஹ்ரா வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.  இதனால் 3 ஓவர்கள் முடிவில் 19 ஓட்டங்களுக்கு  2 விக்கட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறியது. இதனால் ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக கருதப்பட்டது.

 Watch Match Highlights – West Indies vs India 

பின்னர் சார்லஸும், சிம்மன்சும் ஜோடி சேர்ந்தனர். அஸ்வின் வீசிய  பந்து வீச்சில் சிமன்ஸ் அடித்த பந்தை பும்ரா அற்புதமாக தாவிப் பிடியெடுத்தார். ஆனால் அந்த பந்துநோ பால்அகலப்பந்தாக அமைய முதல் அதிர்ஷ்டம் சிம்மன்ஸுக்கு வாய்த்தது. அதனை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். இருவரும் ஓவருக்கு 8 ஓட்டங்களுக்கு  மேல் சராசரியாக பெற்றனர்.

ஆட்டம் மெல்ல மெல்ல மேற்கிந்திய தீவுகள் அணியின் பக்கம் மாறியது. 13 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன் பின் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட்டு  14ஆவது ஓவரை வீச விராத் கொஹ்லி An emotional Virat Kohli walksஅழைக்கப்பட்டார். தான் வீசிய முதல் பந்திலேயே சார்லஸின் விக்கட்டை சரித்தார் . சிறப்பாக விளையாடிய சார்ல்ஸ் 36 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இந்த விக்கட் இந்தியாவிற்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது. ஆனால் பின்னர் சிம்மன்ஸ்சும், ரஸ்ஸலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். அடிக்கும் பந்துகள் எல்லாம் எல்லைக் கோட்டைத் தொட்டுக் கொண்டே இருந்தது. இடையில் மீண்டும் சிம்மன்சுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. பாண்டியா வீசிய பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஆனால் அதுநோ பால்அகலப்பந்தாகக் காணப்பட இரண்டாவது அதிர்ஷ்டம் சிம்மன்ஸுக்கு வாய்த்தது.

பின்னர் சிம்மன்ஸும், ரஸ்ஸலும் எளிதில் வெற்றி வாய்ப்பைத் தன் பக்கம் எடுத்துக் கொண்டனர். தோனி இறுதிவரை பல முயற்சிகளை  செய்து பார்த்தார். ஆனால் Dwayne Bravo and Chris Gayleபலனளிக்கவில்லை. இதனால் 19.4 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி  இலக்கை எட்டியது. 7 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேற்கிந்திய தீவுகள்  அணியின் துடுப்பாட்டத்தில் 3 ஆட்டம் இழப்பு வாய்ப்புகளை அதிஷ்டமாக பெற்ற  சிம்மன்ஸ்  51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 82 ஓட்டங்களையும், கடைசிக் கட்டத்தில் களத்தில் இறங்கி ஓட்டங்களை விளாசிய  ரஸல்  20 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார்.

இந்தியாவின் வெற்றியைப் பறித்து 82 ஓட்டங்களை  விளாசிய சிம்மன்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 6ஆவது டி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் காடன்ஸ் மைதானத்தில் நடைபெறும்.  இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை எதிர் கொள்கிறது.

நேற்றைய போட்டியின் தோல்வியை அடுத்து டோனி செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதுஎனக்குத் தெரியும் நாணய சுழற்ச்சியில் தோல்வியடைந்தது மோசமான விஷயம். இரண்டாவது இனிங்சில் பனிப் பொழிய ஆரம்பித்துவிட்டது. எங்களது முதல் சில ஓவர்கள் மோசமாக இல்லை. ஆனால் எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பனிப் பொழிவு நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வரலாறு இல்லை.உலகக் கிண்ணத் தொடரில் நாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம். எங்களுக்கு நிலைமை மோசமாக இருந்தது.” என்று கூறியள்ளார்.