கோல் அணிக்காக பந்துவீச்சில் அசத்திய அபினாஷ்

NSL Limited Overs Tournament 2024

30

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரில் நேற்று (28) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன. 

கோல் எதிர் ஜப்னா 

காலி, ஜப்னா அணிகள் மோதிய போட்டி கொழும்பில் நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் அணி தேசிய அணி வீரர் சதீர சமரவிக்ரமவின் அபார சதத்தோடு (109) 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 295 ஓட்டங்கள் எடுத்தது. ஜப்னா அணியின் பந்துவீச்சில் சந்துன் வீரக்கொடி, இசித விஜேசுந்தர, எஷான் மாலிங்க, லஹிரு மதுசங்க மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர் 

பின்னர் மழையின் தாக்கம் ஏற்பட்ட இந்தப் போட்டியில் ஜப்னா அணி 4 ஓட்டங்களால் (டக்வெத் லூயிஸ் முறையில்) வெற்றியினை உறுதி செய்தது). கோல் அணிக்காக மர்பின் அபினாஷ் பந்துவீச்சில் பிரகாசித்து 4 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அது வீணாகியது 

கோல் 295 (49.1) சதீர சமரவிக்ரம 109, இசித விஜேசுந்தர 24/2, விஜயகாந்த் வியாஸ்காந்த் 68/2, எஷான் மாலிங்க 58/2, லஹிரு மதுசங்க 34/2  

ஜப்னா 262/7 (45) ஹாசித போயகொட 64, மர்பின் அபினாஷ் 42/4 

 

முடிவுஜப்னா 4 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்) 

கண்டி எதிர் தம்புள்ளை 

கண்டி, தம்புள்ளை அணிகள் இடையிலான போட்டி மழையின் காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. எனினும் இப்போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட தம்புள்ளை அணி வீரர்களில் வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களையும் லக்ஷான் சந்தகன், மொஹமட் சிராஸ் மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட் வீதம் சாய்த்தமை குறிப்பிடத்தக்கது 

கண்டி 185 (43.4) கவின் பண்டார 77, வனிந்து ஹஸரங்க 53/3 

தம்புள்ளை 49/2 (10)  

 

முடிவுபோட்டி மழையினால் கைவிடப்பட்டது  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<