பயிற்சியின் போது உபாதைக்குள்ளான பங்களாதேஷ் பந்துவீச்சாளர்

131

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது உபாதைக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

T20 தொடருக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரில் கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக ஆடி வரும் முஸ்தபிசுர் ரஹ்மான் பயிற்சிகளில் ஈடுபட்ட போது மெதிவ் போர்ட் அடித்த பந்து முஸ்தபிசுர் ரஹ்மானின் தலையில் அடிபட்டதன் காரணமாக உபாதை ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் பந்து தலையில் அடிபட்டதன் பின்னர் முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு முதலுதவி உடனடியாக வழங்கப்பட்டிருந்ததோடு அவர் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் மருத்துவ பரிசோதனைகளில் வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு ஏற்பட்டிருக்கும் உபாதை வெளிக்காயம் மாத்திரம் எனக் கூறப்பட்டிருப்பதோடு அது அவருக்கு வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

BPL T20 தொடரில் முஸ்தபிசுர் ரஹ்மானின் கொமில்லா விக்டோரியன்ஸ் விளையாடும் போட்டி சில்லேட் ஸ்ரைக்கர்ஸ் அணியுடன் நடைபெறுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<