இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 ஓட்டத்தால் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2ஆவது போட்டி நேற்று நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஜோன்சன் சார்ள்ஸ் 43 ஓட்டங்களையும், லென்டல் சீமன்ஸ் 19 ஓட்டங்களையும், கார்லோஸ் பரத்வயிட் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் அமித் மிஷ்ரா 3 விக்கட்டுகளையும், முஹமத் சமி, ரவி  அஸ்வின், ஜஸ்பீர்ட் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் புவனேஸ்வர் குமார் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. இந்திய அணி 2 ஓவர்கள் முடிவில் 15 ஓட்டங்களை பெற்று இருந்த நிலையில் மழை பெய்தது. இந்த மழை தொடர்ச்சியாக பெய்தமையால் போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 143/10 (19.4)

ஜோன்சன் சார்ள்ஸ் 43, லென்டல் சீமன்ஸ் 19, கார்லோஸ் பரத்வயிட் 18

அமித் மிஸ்ரா 24/3, ரவி அஷ்வின் 11/2, பும்ராஹ் 26/2

இந்தியா 15/0 (2)

ரோஹித் ஷர்மா 10*, அஜின்கியா ரஹானே 04*

போட்டி மழையால் கைவிடப்பட்டது