சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இரண்டாம் இன்னிங்சில் மிகவும் ஆரோக்கியமான முன்னிலை ஒன்றுடன் துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி கடினமான இலக்கு ஒன்றினை இலங்கை அணிக்கு நிர்ணயிக்க எத்தணித்து வருகின்றது.
ட்ரினாடில் கடந்த புதன்கிழமையில் (06) இருந்து நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் வியாழக்கிழமை (07) நிறைவடைந்திருந்தது.
19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதி முதல்
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம்…
இரண்டாம் நாள் ஆட்டத்தின் நிறைவின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் இமாலய முதல் இன்னிங்ஸ் (414) துடுப்பாட்டத்தினை அடுத்து தமது முதல் இன்னிங்சில் ஆடிய இலங்கை அணி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் நம்பிக்கைக்குரிய வீரர்களான அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 3 ஓட்டங்களுடனும், ரொஷேன் சில்வா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
நேற்று (08) மூன்றாம் நாளாக நடைபெற்ற போட்டியில் தமது முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகளை விட 383 ஓட்டங்கள் பின்தங்கியவாறு துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி ஆரம்பத்திலேயே ரொஷேன் சில்வாவின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. கேமர் ரோச்சின் வேகத்தினை எதிர்கொள்ள முடியாமல் ரொஷேன் சில்வா போல்ட் செய்யப்பட்டு வெறும் 5 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். ரொஷேனின் விக்கெட் பறிபோனதால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது.
எனினும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்ல உடன் கைகோர்த்த இலங்கையின் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் பொறுமையான முறையில் ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கியிருந்தார். இதனால், இலங்கை அணியின் ஓட்டங்களும் அதிகரித்து மறுமுனையில் பெறுமதிமிக்க இணைப்பாட்டம் ஒன்றும் உருவாகியிருந்தது.
மூன்றாம் நாளின் மதிய போசண இடைவேளைக்கு சற்று முன்னர் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் சந்திமாலின் விக்கெட் பறிபோக 78 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டது. இலங்கை அணியின் மொத்த ஓட்டங்களை நூறினை தாண்ட வைக்க முக்கிய பங்களிப்புத்தந்த தினேஷ் சந்திமால் 5 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களினைப் பெற்றிருந்ததார்.
ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷுக்கு ‘வைட்வொஷ்’ தோல்வி
கடைசி பந்துவரை பரபரப்பூட்டிய ஆப்கானிஸ்தானுடனான மூன்றாவதும் கடைசியுமான டி-20 போட்டியில் 1 ஓட்டத்தால் தோல்வியடைந்த…
மதிய போசண இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில், நிரோஷன் திக்வெல்ல (25)* மற்றும் தில்ருவான் பெரேரா (04)* ஆகியோர் இலங்கையின் துடுப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்
பின்னர், இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்சில் 43 ஆவது ஓவர் வீசப்படும் போது, தேவையில்லாத ஓட்டம் ஒன்றைப் பெற முயன்ற நிரோஷன் திக்வெல்ல துரதிஷ்டவசமான முறையில் கிரைக் பரத்வைட்டினால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் 1,000 டெஸ்ட் ஓட்டங்களைத் தாண்டிய திக்வெல்லவின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் வெறும் 31 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.
திக்வெல்லவை அடுத்து நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் எவரையும் கொண்டிருக்காத இலங்கை அணி தமது எஞ்சிய அனைத்து விக்கெட்டுக்களையும் 55.4 ஓவர்களில் பறிகொடுத்து 185 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்சுக்காக குவித்தது.
இலங்கை அணியை குறைந்த ஓட்டங்களுக்குள் மடக்கி 229 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்றுக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் மிக்குவேல் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் மற்றும் ஷன்னோன் கேப்ரியல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர். இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்ட நிறைவோடு போட்டியின் மூன்றாம் நாளுக்கான தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் நல்ல முன்னிலை ஒன்றுடன் இலங்கைக்கு மிகவும் சவால் தரக்கூடிய வெற்றி இலக்கொன்றினை கொடுக்க தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியின் மூன்றாம் நாள் முடிவில், 131 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணியை விட 360 ஓட்டங்கள் முன்னிலை பெற்று மிகவும் வலுவான நிலையில் இருக்கின்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி தமது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை இழந்த போதிலும் களத்தில் தனது நான்காவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த கெய்ரன் பவல் 64 ஓட்டங்களுடனும், முதல் இன்னிங்சில் சதம் கடந்த சேன் டோவ்ரிச் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்து நம்பிக்கை தருகின்றனர்.
இந்தியாவிடம் தோற்ற இலங்கை மகளிர் இக்கட்டான நிலையில்
மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான தீர்க்கமான லீக் போட்டியில் 7 விக்கெட்டுகளால் தோல்வி …
போட்டியின் நான்காம் நாளில் தமக்கு சாதகமான முடிவுகளைப்பெற கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
ஸ்கோர் விபரம்
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<