மேற்கிந்திய தீவுகளை துவம்சம் செய்த இங்கிலாந்து வைட்வொஷ் வெற்றி

156
@AFP

மேற்கிந்திய தீவுகளை 71 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து, அந்த அணியுடனான 3ஆவதும் இறுதியுமான இருபது-20 போட்டியிலும் 8 விக்கெட்டுகளால் வென்று தொடரை 3-0 என வைட்வொஷ் செய்தது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் 45 ஓட்டங்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இந்தப் போட்டியில் 13 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மேற்கிந்திய தீவுகளை 45 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி

டி-20 சர்வதேச போட்டிகளில் இரண்டாவது மிகக் குறைந்த..

சென் கீட்ஸில் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி தனது சிறந்த பந்து வீச்சு பிரதியாக 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

தவிர, மார்க் வூட் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஆதில் ரஷீத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளை முழுமையாக தும்சம் செய்தனர்.  

கிறிஸ் கெயிலுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தனது முதலாவது இருபது-20 போட்டியில் களமிறங்கிய ஜோன் கெம்பல் மற்றும் மேலும் இரு வீரர்கள் பெற்ற தலா 11 ஓட்டங்களே மேற்கிந்திய தீவுகளின் அணி வரிசையில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மொத்த ஓட்டங்களானது அந்த அணி இருபது-20 போட்டிகளில் பெறும் 3ஆவது மிகக் குறைந்த ஓட்டங்களாகும். அதே போன்று பந்துகள் அடிப்படையில் இருபது-20 சர்வதேச போட்டிகளில் ஐந்தாவது மிகக் குறுகிய இன்னிங்ஸாகவும் இது இருந்தது.

பதிலெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் தனது இலக்கை எட்டியதோடு ஆரம்ப வீரர் ஜொன்னி பெஸ்டோ 31 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசினார்.

Photos: Sri Lanka vs South Africa – 3rd ODI

ThePapare.com | 10/03/2019 | Editing and re-using images without..

57 பந்துகள் மீதம் இருக்க இங்கிலாந்து அணி பெற்ற இந்த வெற்றியானது அந்த அணி பந்துகள் அடிப்படையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.  

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-1 என தோற்ற நிலையில் ஒருநாள் தொடர் 2-2 சமநிலையில் அடைந்த போதும் இருபது-20 தொடரில் அந்த அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.  

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 71 (13) – டேவிட் வில்லி 4/7, மார்க் வுட் 3/9, ஆதில் ரஷீத் 2/18

இங்கிலாந்து – 72/2 (10.3) – ஜொன்னி பெஸ்டோ 37, அலெக்ஸ் ஹேல்ஸ்

முடிவு – இங்கிலாந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<