Home Tamil ரொஸ்டன் சேஸின் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளுக்கு இலகு வெற்றி

ரொஸ்டன் சேஸின் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளுக்கு இலகு வெற்றி

337

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் கட்டுநாயக்கவில் இன்று (20) நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும்……

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக கடந்த போட்டியில் ஓட்டங்கள் இன்றி வெளியேறிய, பெதும் நிஷங்க 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்த போதிலும், ஏனைய மத்தியவரிசை வீரர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் வெளியேறினர்.

எனினும், அசேல குணரத்ன சற்று ஓட்டங்களை குவித்து 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மினோத் பானுக 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதியில் வேகமாக ஓட்டங்களை குவித்த ரமேஷ் மெண்டிஸ் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Photos: Sri Lanka vs West Indies – Warm-Up Match 2

ThePapare.com | Waruna Lakmal | 20/02/2020 Editing and re-using…..

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ரொஸ்டன் சேஸின் சதம் மற்றும் ஷேய் ஹோப் மற்றும் சுனில் எம்ப்ரிஸ் ஆகியோரின் பங்களிப்புடன் 46.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் ரொஸ்டன் சேஸ் 136 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஷேய் ஹோப் 84 ஓட்டங்களையும், சுனில் எம்ப்ரிஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், அமில அபோன்சோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி வெற்றியை தக்கவைத்திருந்த நிலையில், இரண்டாவது பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுக்கொண்டது.

இதேவேளை, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 22ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Result
Sri Lanka
276/8 (50)
West Indies
277/4 (46.3)
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c & b Roston Chase 41 43 5 0 95.35
Lahiru Thirimanne c Kieron Pollard b Jason Holder 4 20 0 0 20.00
Dinesh Chandimal b Keemo Paul 5 12 1 0 41.67
Asela Gunarathne c Shai Hope b Fabian Allen 47 56 4 0 83.93
Bhanuka Rajapakse c Darren Bravo, b Roston Chase 5 9 1 0 55.56
Minod Bhanuka c Shai Hope b Keemo Paul 69 88 4 1 78.41
Ramesh Mendis not out 64 63 5 2 101.59
Amila Aponso lbw b Hayden Walsh 1 5 0 0 20.00
Kasun Rajitha run out (Keemo Paul) 6 4 1 0 150.00
Vishwa Fernando not out 3 2 0 0 150.00
Extras 31 (b 0 , lb 3 , nb 2, w 26, pen 0)
Total 276/8 (50 Overs, RR: 5.52)
Fall of Wickets 1-21 (7.2) Lahiru Thirimanne, 2-47 (10.6) Dinesh Chandimal, 3-62 (13.2) Pathum Nissanka, 4-74 (17.2) Bhanuka Rajapakse, 5-143 (29.4) Asela Gunarathne, 6-226 (45.1) Minod Bhanuka, 7-239 (46.5) Amila Aponso, 8-246 (47.4) Kasun Rajitha,
Bowling O M R W Econ
Romario Shepherd 9 0 62 0 6.89
Jason Holder 8 1 34 1 4.25
Keemo Paul 9 0 45 2 5.00
Roston Chase 9 1 57 2 6.33
Hayden Walsh 7 0 44 1 6.29
Fabian Allen 5 1 17 1 3.40
Rovman Powell 3 0 14 0 4.67

Batsmen R B 4s 6s SR
Brandon King c Minod Bhanuka b Asitha Fernando 7 10 1 0 70.00
Shai Hope lbw b Amila Aponso 85 102 11 0 83.33
Darren Bravo, c Minod Bhanuka b Vishwa Fernando 3 10 0 0 30.00
Roston Chase b Vishwa Fernando 136 113 16 1 120.35
SW Ambris not out 34 44 1 1 77.27
Fabian Allen not out 0 0 0 0 0.00
Extras 12 (b 0 , lb 3 , nb 0, w 9, pen 0)
Total 277/4 (46.3 Overs, RR: 5.96)
Fall of Wickets 1-20 (4.3) Brandon King, 2-35 (7.6) Darren Bravo,, 3-168 (30.5) Shai Hope, 4-276 (46.3) Roston Chase,
Bowling O M R W Econ
Asitha Fernando 7.2 0 39 1 5.42
Vishwa Fernando 8.3 0 56 2 6.75
Kasun Rajitha 10 0 66 0 6.60
Amila Aponso 10 0 47 1 4.70
Ramesh Mendis 4.4 0 25 0 5.68
Asela Gunarathne 6 0 41 0 6.83

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<