ஆஸி. வீரரினை உரசியமைக்கு விராட் கோலிக்கு அபாரதம் வழங்கிய ICC

68

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டவீரரான விராட் கோலிக்கு அவுஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமைக்காக அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

>>பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதலுடன் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பம்

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி இன்று (26) அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆரம்பமாகியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் பெற்ற 19 வயது வீரரான சேம் கொன்ஸ்டாஸினை வேண்டுமென்றே இந்திய அணியின் வீரரான விராட் கோலி தோற்பட்டையில் உரசி Sledging செய்த நிகழ்வு பதிவாகியது.

போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினுடைய 10ஆவது ஓவரில் பதிவாகிய இந்த Sledging நிகழ்வினை அடுத்தே விராட் கோலிக்கு போட்டிக்கட்டணத்தில் 20% அபராதமும், ஒரு நன்னடத்தை விதிமீறல் புள்ளியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

விராட் கோலி தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டு அபாரதங்களை ஏற்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அனுபவம் கொண்ட கோலியின் இந்த Sledging செயற்பாட்டிற்கு கிரிக்கெட் உலகிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<