ஆஸி. 1986ஆம் ஆண்டு பயன்படுத்திய ஜேர்சி மீண்டும் உலகக் கிண்ணத்தில்

249
ACICS Twitter

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜேர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு தயாராகிவரும் நிலையில், புதிய ஜேர்சிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணிக்கான உலகக் கிண்ண ஜேர்சி ஏற்கனவே வெளியிடப்பட்டது.

உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ….

இந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அந்த அணிக்கான புதிய ஜேர்சியை நேற்று (09) வெளியிட்டது. இந்த ஜேர்சியை அறிமுகம் செய்யும் விழாவில் கிளென் மெக்ஸ்வெல் பங்கேற்றிருந்தார். அத்துடன். இந்த ஜேர்சியை ACICS ஆடை நிறுவனம் தயாரித்துள்ளமை சிறப்பம்சமாகும்.  

அவுஸ்திரேலிய அணி 1986ஆம் ஆண்டுகளில் பயன்படுத்திய பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த உடையை 2019 உலகக் கிண்ணத்திலும் பயன்படுத்தவுள்ளது. முன்னதாக இந்த ஜேர்சியை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் முதல் முறையாக அவுஸ்திரேலியா அணி பயன்படுத்தியிருந்தது.

இதேவேளை, அடுத்த கோடைக் காலத்தில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீண்டும் ரிட்ரோ ஜேர்சிகளை அணிந்தே விளையாடவுள்ளது. அவுஸ்திரேலிய அணி இதற்குமுன் 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பயன்படுத்திய ஜேர்சியுடன் மேலும் ஏழு ஜேர்சிகள் தொடர்பில் விசேட வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டது. இறுதியில் ரிட்ரோ ஜேர்சிக்கு பெரும்பாலானோர் வாக்களித்ததால் அவுஸ்திரேலிய அணி அந்த ஜேர்சியையே தொடர்ந்து பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டது.  

இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி, தமது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பிரிஸ்டெலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், உலகக் கிண்ணத்துக்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இதன்படி, இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட நியூசிலாந்து குழாமும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன.

எனினும், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் என்பது பெரும்பாலானோரின் எதிர்வுகூறலாக உள்ளது.  

உலகக் கிண்ணத்தில் காலநிலை முக்கிய செல்வாக்கு செலுத்தும் -பீடர்சன்

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகும் …..

இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த அவுஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை 3-2 எனவும், பாகிஸ்தானை 5-0 எனவும் வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. எனவே ஸ்மித்தும், வோர்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் அவுஸ்திரேலியா மேலும் வலுவான அணியாகிவிடும்.  

அதுமட்டுமல்லாமல், உலகக் கிண்ணத்துக்கு அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணி சவாலான அணியாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<