டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றடைந்த மே.தீவுகள் அணி

181

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, மன்செஸ்டரை சென்றடைந்தது. 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்தை சென்றடைந்துள்ளது. 

மேற்கிந்திய தீவுகளின் பல்வேறு தீவுகளில் இருந்த வீரர்கள், இரு விமானங்கள் ஊடாக ஆன்டிகுவாவை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

வீரர்களுக்கு கொரேனா அறிகுறி இல்லை என்ற அதன் அறிக்கை கிடைத்த பிறகுதான் தனி விமானத்தில் ஆன்டிகுவாவில் இருந்து அந்த அணி வீரர்கள் நேற்றுமுன்தினம் புறப்பட்டனர்.  

இதன்படி, 14 அதிகாரிகள் மற்றும் 25 பேர் கொண்ட அந்த அணி வீரர்கள் நேற்று (09) காலை மன்செஸ்டரைசென்றடைந்தனர்

இதில் லண்டனில் வசித்து வருகின்ற அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.  

இதேநேரம், இங்கிலாந்து புறப்படும் முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் அளித்த பேட்டியில்

”கொரோனாவுக்குப் பின் கிரிக்கெட்டில் நாங்கள் எடுக்கும் இந்த முயற்சி மிகப்பெரிய நடவடிக்கையாகும். டெஸ்ட் தொடர் விளையாட இங்கிலாந்து செல்கிறோம். அதிகமாக நாங்கள் தயாராக வேண்டியுள்ளது. விளையாட்டில் புதிய கட்டத்துக்குள் நுழைகிறோம்” எனத் தெரிவித்தார்

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில்,  

”மன்செஸ்டரில் வீரர்கள் அனைவரும் மூன்று வாரங்கள் தனிமைப்டுத்தப்படுவர். பிறகு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றால் ஏழு வாரங்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கான பயிற்சிகளை எமது வீரர்கள் ஆரம்பிப்பார்கள்” என தெரிவிக்கபட்டடுள்ளது

இதுஇவ்வாறிருக்க, மேற்கிந்திய தீவுகள் அணியின் வருகை தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில்

”நீங்கள் இங்கு வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். டெஸ்ட் தொடர் ஆரம்பமாகும் வரை காத்திருக்க முடியவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது

மே.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோ ரூட் விளையாடுவதில் சந்தேகம்!

இங்கிலாந்துமேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8ஆம் திகதி சவுத்ஹம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது

2ஆவது டெஸ்ட் போட்டி ஜூலை 16-20 வரையிலும், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 24-28 வரையிலும் மன்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளது.  

மேலும், .சி.சி.யின் புதிய வழிகாட்டல் விதிமுறைகள் இந்த டெஸ்ட் தொடரில் பின்பற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<