பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் குழாம் அறிவிப்பு

Commonwealth Games 2022

90

இலங்கையைச் சேர்ந்த 10 பளுதூக்கல் வீரர்கள், பேர்மிங்கமில் நடைபெறவுள்ள 22வது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதியை பெற்றுள்ளனர் என சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பொதுநலவாய விளையாட்டு விழா பேர்மிங்கத்தில் எதிர்வரும் ஜூலை 28ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

>>ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண அரையிறுதியில் இலங்கை

இந்த போட்டித்தொடருக்கான வீரர்கள் தெரிவானது ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதிவரையான காலப்பகுதியை உள்ளடக்கியிருந்தது. இதில், கடந்த வருடம் டிசம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் மற்றும் கடந்த மாதத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் இலங்கை வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளனர்.

நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்ற முன்னாள் வீரர்களான சிந்தன விதானகே, இந்திக திஸாநாயக்க மற்றும் சதுரங்க லக்மால் ஜயசூரிய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிந்தக விதானகேவின் தொடர்ச்சியாக ஐந்தாவது பொதுநலவாய விளையாட்டு விழாவாக இது அமைந்துள்ளது. அதேநேரம், இலங்கை அணியில் 6 வீரர்கள் மற்றும் 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பளுதூக்கல் குழாம்

பெண்கள் அணி

  • ஸ்ரீமாலி சமரகோன் – 49 கிலோகிராம் எடைப்பிரிவு
  • சாமரி வர்ணகுலசூரிய – 55 கிலோகிராம் எடைப்பிரிவு
  • சதுரிக்கா பிரியந்தி – 87 கிலோகிராம் எடைப்பிரிவு
  • திமாலி ஹபுதன்ன – 87 கிலோகிராம் எடைப்பிரிவு

ஆண்கள் அணி

  • திலங்க இசுரு குமார – 55 கிலோகிராம் எடைப்பிரிவு
  • திலங்க விராஜ் பலங்கசிங்க 61 கிலோகிராம் எடைப்பிரிவு
  • சதுரங்க லக்மால் ஜயசூரிய – 67 கிலோகிராம் எடைப்பிரிவு
  • இந்திக திசாநாயக்க – 73 கிலோகிராம் எடைப்பிரிவு
  • சிந்தக விதானகே – 81 கிலோகிராம் எடைப்பிரிவு
  • உஷான் விதனபதிரண – 109 கிலோகிராம் எடைப்பிரிவு

>>மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு<<