வனிந்து ஹஸரங்கவின் அதிரடி ஆட்டம் வீண்

108

கல்ப் ஜயன்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற இன்டர்நஷனல் T20 லீக் (ILT20) தொடரின் இறுதிப் போட்டியில், கல்ப் ஜயன்ட்ஸ் வீரர்கள் 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு தொடரின் கன்னி சம்பியன்களாகவும் நாமம் சூடியிருக்கின்றனர்.

அவுஸ்திரேலிய அணிக்குழாத்துடன் இணையும் மெதிவ் குஹ்னமேன்

நேற்று (12) துபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்ப் ஜயன்ட்ஸ் வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு வழங்கியிருந்தனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. அணியின் ஆரம்பவீரர்களாக களம் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் (1), ரொஹான் முஸ்தபா (6) ஆகியோர் சொதப்ப மேலும் இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புணர்ச்சியுடன் ஆடத்தொடங்கிய வனிந்து ஹஸரங்க களத்தில் இருந்த சேம் பில்லிங்ஸ் உடன் இணைந்து அதிரடி  கலந்த ஆட்டத்துடன் அணியின் ஓட்டங்களை உயர்த்த தொடங்கினார்.

பின்னர் வனிந்து ஹஸரங்க அரைச்சதம் கடக்க டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது. டெஸ்ர்ட் வைப்பர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் வனிந்து ஹஸரங்க வெறும் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சேம் பில்லிங்ஸ் 29 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கல்ப் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் கார்லோஸ் ப்ராத்வைட் 3 விக்கெட்டுக்களையும், கைஸ் அஹமட் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

எனது பரிந்துரையில் தான் சர்பராஸ் அணியில் இடம்பிடித்தார் – ரிஸ்வான்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 147 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கல்ப் ஜயன்ட்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களுடன் அடைந்தது.

கல்ப் ஜயன்ட்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய அதன் துடுப்பாட்டத்தில் கிறிஸ் லின் அரைச்சதம் விளாசி ஒரு சிக்ஸர் 9 பௌண்டரிகள் அடங்கலாக 50 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்தார்.

கல்ப் ஜயன்ட்ஸ் அணி பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க, டொம் கர்ரன் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

டெஸர்ட் வைப்பர்ஸ் – 146/8 (20) வனிந்து ஹஸரங்க 55(27), கார்லோஸ் ப்ராத்வைட் 19/3(4), கைஸ் அஹ்மட் 29/2(4)

கல்ப் ஜயன்ட்ஸ் – 149/3 (20) கிறிஸ் லின் 72(50), வனிந்து ஹஸரங்க 28/1(4)

முடிவு – கல்ப் ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<