இந்திய அணியில் இடம்பிடித்தார் தங்கராசு நடராஜன்!

107
Capture courtsey - IPLT20.COM
 

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய குழாத்தில், பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை (BCCI) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின்படி, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர், நாடு திரும்புவதற்கு விடுமுறை கோரியிருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் சபை அவருக்கு விடுமுறை வழங்க அனுமதித்துள்ளது.

Read : IPL அரங்கில் ஷிகர் தவான் புதிய பதிவு

அதேநேரம், உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் சபை வைத்திய குழுவின் அறிவுப்புக்கு அமைய டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் சர்மா விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், T20I குழாத்தில் இணைக்கப்படடிருந்த இளம் விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சன், மேலதிக விக்கெட் காப்பாளராக ஒருநாள் குழாத்திலும் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன், உபாதைக்குள்ளாகியுள்ள இஷாந்த் சர்மா, தேசிய கிரிக்கெட் அக்கடமியில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இவர் உபாதையிலிருந்து மீண்டு உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில், டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்படுவார்.

அதுமாத்திரமின்றி இந்திய அணியின் T20I  குழாத்தில் முக்கியமான மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்திய T20I   குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த வருன் சக்கரவர்த்தி தோற்பட்டை உபாதை காரணமாக துரதிஷ்டவசமாக குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், வருன் சக்கரவர்தியின் இடத்துக்கு மற்றுமொரு தமிழ்நாட்டு வீரரும், வேகப் பந்துவீச்சாளருமான தங்கராசு நடராஜன் இணைக்கப்பட்டுள்ளார்.

Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

தமிழகத்தின் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து, IPL தொடரில் சர்வதேச துடுப்பாட்ட வீரர்களை தனக்கே உரித்தான…

இதேவேளை, இந்திய அணியின் அனுபவ விக்கெட் காப்பாளர் விரிதிமன் ஷஹா தொடர்ந்து தசைப்படிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துவரும் நிலையில், எதிர்வரும் தினங்களில் அவர் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வலைப் பந்துவீச்சாளராக அவுஸ்திரேலிய தொடரில் இடம்பிடித்திருந்த கமலேஸ் நாகர்கொடி, பந்துவீச்சு வேலைப்பளு காரணமாக தொடரில் இணையமாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அடுத்த மாதம் 04ம் திகதி T20I போட்டியுடன் தொடரை ஆரம்பிக்கவுள்ளதுடன், மொத்தமாக 3 T20I போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க