சர்ரே அணியுடன் இணையும் விராட் கோஹ்லி

207

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் கழகமான சர்ரே அணியுடன் விளையாட இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு ஓகஸ்ட் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆடுகளம், பந்துவீச்சு ஆகியவற்றுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் சர்ரே அணியில் விளையாட கோஹ்லி ஒப்பந்தம் செய்துள்ளார்.

உலக பதினொருவர் அணியில் கார்த்திக், பாண்ட்யா இணைப்பு

இந்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்..

ோஹ்லி விளையாடப் போகிறார் என்ற செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்தன. எனினும், எந்த பிராந்திய அணி என்பது தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சர்ரே அணி, நேற்று(03) தமது கழகத்துடன் விராட் கோஹ்லி இணைந்துகொள்ளவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது குறித்து அவ்வணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் மாதம் மட்டும் எங்கள் அணியில் விராட் கோஹ்லி இணைந்து விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விராட் கோஹ்லி கூறுகையில், நீண்ட காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்து வந்தது. எனக்கு இந்த வாய்ப்பு அளித்த சர்ரே அணி நிர்வாகத்துக்கும், அலெக் ஸ்டூவர்ட்டுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்ரே அணியின் இயக்குனர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறுகையில், இந்தியாவின் நட்சத்திர வீரரான கோஹ்லி எங்கள் அணியில் இணைந்து விளையாடுவது பெருமையாக இருக்கிறது. ஜூன் மாதம் முழுவதும் சர்ரே அணிக்காக விராட் கோஹ்லி விளையாட இருப்பது இளம் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும். அதிகமான விடயங்களை அவர்கள் கோஹ்லியிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கும், வளர்ந்துவரும் வீரர்களுக்கும் கோஹ்லியின் வருகை உத்வேகத்தை அளிக்கும்” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகில் சிறந்த வீரராக கருதப்படும் கோஹ்லி கடந்த காலங்கில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், இங்கிலாந்து மண்ணில் எதிர்பார்த்தளவு அவரால் சோபிக்க முடியாது போனது.

அதிலும் குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த கோஹ்லி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுபோன்று இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன் கூட்டியே தயாராகும் வகையில் இங்கிலாந்து உள்ளூர் அணியில் விராட் கோஹ்லி விளையாடுகிறார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் பச்சைக் கொடி காட்டியது.

இந்நிலையில், .பி.எல் தொடர் நிறைவுக்கு வந்த பிறகு இந்தியா முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒற்றை போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது.

அதற்கு முன்னதாக எதிர்வரும் ஜூன் மாதம் சர்ரே அணியின் இணைந்து உள்ளூர் சம்பியன்ஷிப் போட்டியில் கோஹ்லி விளையாட உள்ளார். இதன் காரணமாக ஜூன் மாதம் 14 முதல் 18ஆம் திகதி வரை பெங்களுரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணியின் கன்னி டெஸ்ட் போட்டியில் கோஹ்லி பங்கேற்மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.

எனவே, சர்ரே அணி ஹெம்ப்ஷையார் அணியை ஜூன் 9ஆம் திகதியும், சமர்செட் அணியை ஜூன் 20ஆம் திகதியும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் விராட் கோஹ்லி விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், விராட் கோஹ்லி ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவதா, உள்ளூர் போட்டியில் விளையாடுவதா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

”டெஸ்ட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாகக்குழு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உள்ளூர் போட்டியில் வீரர்கள் விளையாட உள்ளனர். ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்காக அவர்களை நிறுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

>> விஸ்டன் விருதுக்கு கோஹ்லி, ராஷித் கான், மிதாலி தேர்வு

ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. விராட் கோஹ்லிக்கு எதிராக அல்ல. ஆப்கானிஸ்தான் போட்டிக்காக உள்ளூர் போட்டியில் விளையாடும் வீரர்கள் திரும்ப அழைக்கப்படமாட்டார்கள். இங்கிலாந்து தொடருக்குத்தான் முக்கியத்துவம். அங்கே சிறப்பாக விளையாட இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட நிலைமைக்கு காரணமாக அதே தவறு மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது என்றார்.

ஏற்கனவே, இந்திய வீரர்கள் 3 பேர் இங்கிலாந்து உள்ளூர் அணியில் விளையாடி வரும் நிலையில், 4ஆவது வீரராக கோஹ்லி இணைந்து கொள்கின்றார். ஏற்கனவே யோர்க்ஷையார் அணியில் சட்டீஸ்வர் புஜாராவும், சசெக்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும், வருண் ஆரோன் லீசெஸ்டெர்சையர் அணியிலும் விளையாடி வருகின்றனர்.

இதேநேம், ஓகஸ்ட் மாதத்தில் இருந்து அக்சர் படேல் டர்ஹாம் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<