டுவிட்டரில் வைரலாகிய விராட் கோஹ்லி மரத்தில் இருக்கும் புகைப்படம்

140

மும்பையில் கொவிட்-19 வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வீட்டிலிருந்து வெளியில் வரமுடியாதபடி கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்.

கொவிட்-19 வைரஸ் காரணமாக கோஹ்லி வீட்டுக்குள் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் துடிப்பாக இருந்து வருகின்றார். இதில், முக்கியமாக தன்னுடைய கடந்த கால நினைவுகளை அவருடைய உத்தியோபூர்வ சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்.

அயர்லாந்துக்கு எதிரான குழாத்தை அறிவித்த இங்கிலாந்து

இவ்வாறு இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், நேற்று விராட் கோஹ்லி மரம் ஒன்றில் ஏறியிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோஹ்லியின் இந்த புகைப்படம் சில நிமிடங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.

புகைப்படத்தை பதிவிட்ட விராட் கோஹ்லி, மரம் ஒன்றில் ஏறி மகிழ்ச்சியாக இருந்த தருணத்தின் ஞாபகங்கள் என பதிவிட்டிருந்தார். விராட் கோஹ்லியின் இந்த ட்விட் வைரலானதுடன், இதனை பார்வையிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விராட் கோஹ்லியை கலாய்க்கும் முகமாக பதிவொன்றை இட்டுள்ளார். இர்ப்பான் பதான் குறித்த ட்விட்டில், “மரத்தில் ஏறி போட்டி ஒன்றை பார்க்கிறீர்களா?” என பதிவிட்டிருந்தார்.

விராட் கோஹ்லி கடந்த நான்கு மாதங்களாக போட்டிகள் மற்றும் வெளிக்கள பயிற்சிகளில் ஈடுபடவில்லை. ஏனைய சில இந்திய அணி வீரர்கள் தற்போது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். எனினும், மும்பை நகரம் கொவிட்-19 வைரஸ் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோஹ்லிக்கு வலைப்பயிற்சியில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை கோஹ்லிக்கு ஏற்பட்டுள்ளது.

கோஹ்லி கொவிட்-19 வைரஸ் காரணமாக பயிற்சிகளில் ஈடுபடாவிட்டாலும், இந்திய கிரிக்கெட் சபையின் இணையத்தளத்தில், சக வீரர் மயங்க் அகர்வாலுடன், துடுப்பெடுத்தாடும் போது, பந்துவீச்சாளரை அவதானிப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“நான் பந்துவீச்சாளர் ஒருவரை கணித்துக்கொள்வேன். அவர் அடுத்து எந்த விதமான பந்தினை வீச போகின்றார் என்பதை அவரது உடல்மொழி, ரன்-அப் மற்றும் அவரது மணிக்கட்டு போன்றவற்றின் மாற்றங்களிலிருந்து அவதானிப்பேன். அதிகமான தடவைகளில் பந்துவீச்சாளர்களின் இந்த மாற்றங்களை வைத்து சரியான பந்தினை பிடித்துக்கொள்வேன்.

அவ்வாறு பந்துவீச்சாளர் நாம் நினைத்த பந்தினை வீசியவுடன் அதனை எல்லைக்கோட்டுக்கு வெளியில் விளாசும் போது, அதன்மூலம் சிறந்த உணர்வு கிடைக்கும். பந்துவீச்சாளரிடமிருந்து என்ன வருகின்றது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதேநேரம், நாம் மிகவும் நுணுக்மாகவும், அதிகமாகவும் சிந்தித்தால் நாம் பயத்தால் தடுமாறிவிடவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பயத்தை வெளியேற்றி, சந்தர்ப்பத்திற்கேற்ப, குறித்த பந்துக்கு பெறமுடிந்ததை சரியாக பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க