விராட் கோஹ்லியை ரசிகர்களிடம் பகிரங்கமாக புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித்

207

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக வலம் வருபவர் இந்திய அணியின் விராட் கோஹ்லி என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து வெளியிட்டுள்ளார்.

விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதேநேரம், ஐ.பி.எல். தொடரையடுத்து, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரிலும் இவர்கள் சந்திக்கவுள்ளனர்.

நான்காவது முறையாக CPL தொடரின் சம்பியனான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ்

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை, துடுப்பாட்ட வீரர்களில் அதிகமான போட்டிகள் இவர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தாலும், போட்டியை தவிர்த்து இருவரும் நல்லுறவை பேணி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வரும் நிலையில், இன்ஸ்ராகிராம் மூலமாக ரசிகர்களுடன் பேசியுள்ளார். குறித்த இந்த கலந்துரையாடலின் போது, ரசிகர்களில் ஒருவர் தற்போது உலகில் உள்ள மிகச்சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரசிகர் இவ்வாறு எழுப்பிய கேள்விக்கு எந்தவித தயக்கமும் காட்டாத ஸ்டீவ் ஸ்மித், உலகில் தற்போதுள்ள மிகச்சிறந்த ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் இந்திய அணியின் விராட் கோஹ்லிதான் என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி, தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர், 11867 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 43 சதங்களையும் அடித்துள்ளார். இதன்மூலம் இன்னும் 7 சதங்களை குவிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒருநாள் சதங்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பினை கோஹ்லி பெற்றுக்கொள்வார்.

அதேநேரம், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித் இம்முறை ஐ.பி.எல். தொடரில் அதிகம் கவனிக்க வேண்டிய வீரர்களாக கே.எல்.ராஹூல் மற்றும் சஞ்சு செம்சுன் ஆகியோரை பெயரிட்டுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், ஐ.பி.எல். தொடரில் தன்னுடைய ராஜஸ்தான் அணிக்காக விளையாடவுள்ள ஜோஸ் பட்லர் தொடர்பிலும் ஸ்மித் கருத்து வெளியிட்டுள்ளார்.

Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

“ஜோஸ் பட்லர் மிக அபாயகரமான துடுப்பாட்ட வீரர். இந்த வாரம் எமக்கு எதிரான போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களை பெறமாட்டார் என நம்புகிறோம். ஆனால், அதன் பின்னர் ஐ.பி.எல். தொடரில் அவர் விரும்பும் அளவு ஓட்டங்களை குவிப்பார்” என்றார்.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்றைய தினம் (11) ஆரம்பமாகவுள்ள நிலையில், ஸ்மித் ஐ.பி.எல். தொடருக்காக எதிர்வரும் 16ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தை அடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<