தம்புள்ள – காலி அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாளில் காலி அணியை சுழலில் மிரட்டிய வனிந்து ஹஸரங்க நான்கு விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்த, இன்றைய ஆட்ட நேர முடிவில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடி வருகின்ற தம்புள்ள அணி, இளம் வீரர் சொனால் தினூஷவின் போராட்ட அரைச் சததத்தின் உதவியுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (02) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.
காலி அணியின் அழைப்பினால் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான இன்று (03) 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த காலி அணி, 53.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணிக்காக பின்வரிசையில் களமிறங்கி துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பெதும் குமார அரைச் சதம் கடந்து 78 ஓட்டங்களையும், சுமிந்த லக்ஷான் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
தம்புள்ள அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லஹிரு சமரகோன் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சொனால் தினூஷ 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
அபிஷேக், மினோத் அரைச் சதமடிக்க; 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் துனித்
இதனையடுத்து 61 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் லியனாரச்சி 6 ஓட்டங்களை எடுத்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பவன் ரத்நாயக 4 ஓட்டங்களுடன் மொஹமட் சிராஸின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய சனோஜ் தர்ஷிக 10 ஓட்டங்களுடனும், முதல் இன்னிங்ஸில் அரைச் சதமடித்த அணித்தலைவர் மினோத் பாணுக 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுக்க, தம்புள்ள அணி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது.
அதன் பின்னர் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சொனால் தினூஷ மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகிய இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர். ஒரு பக்கம் அஷான் பிரியன்ஜன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு பக்கம் 22 வயது இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சொனால் தினூஷ அரைச் சதம் கடந்தார்.
இவர்களது இணைப்பாட்டத்துடன் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்தது.
இதில், சொனால் தினூஷ 51 ஓட்டங்களையும், அஷான் பிரியன்ஜன் 34 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர். காலி அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஸ் 2 விக்கெட்டுகளையும், சங்கீத் குரே ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.
இதேநேரம், தம்புள்ள அணியானது, காலி அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 177 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
நாளை போட்டியின் மூன்றாவது (04) நாளாகும்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abishek Liyanarachchi | c Sohan de Livera b Suminda Lakshan | 54 | 75 | 7 | 1 | 72.00 |
Sonal Dinusha | c Sohan de Livera b Kavishka Anjula | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Pavan Rathnayake | c Sohan de Livera b Kavishka Anjula | 31 | 59 | 5 | 0 | 52.54 |
Sanoj Darshika | c Mohammad Shiraz b Dunith Wellalage | 37 | 86 | 5 | 0 | 43.02 |
Minod Bhanuka | run out (Lakshan Edirisinghe) | 50 | 84 | 8 | 0 | 59.52 |
Ashan Priyanjan | c Suminda Lakshan b Dunith Wellalage | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Wanindu Hasaranga | c Suminda Lakshan b Dunith Wellalage | 15 | 28 | 2 | 0 | 53.57 |
Dushan Hemantha | not out | 27 | 59 | 3 | 0 | 45.76 |
Ranitha Liyanarachchi | c Suminda Lakshan b Dunith Wellalage | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Chamindu Wijesinghe | st Sohan de Livera b Dunith Wellalage | 15 | 24 | 1 | 1 | 62.50 |
Lahiru Samarakoon | c Mohammad Shiraz b Sangeeth Cooray | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Extras | 15 (b 6 , lb 3 , nb 4, w 2, pen 0) |
Total | 248/10 (72.1 Overs, RR: 3.44) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kavishka Anjula | 14 | 1 | 38 | 2 | 2.71 | |
Mohammad Shiraz | 13 | 4 | 42 | 0 | 3.23 | |
Dunith Wellalage | 17 | 4 | 58 | 5 | 3.41 | |
Asanka Manoj | 12 | 1 | 43 | 0 | 3.58 | |
Suminda Lakshan | 10 | 3 | 35 | 1 | 3.50 | |
Sangeeth Cooray | 6.1 | 0 | 23 | 1 | 3.77 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sohan de Livera | c Minod Bhanuka b Lahiru Samarakoon | 7 | 13 | 1 | 0 | 53.85 |
Sangeeth Cooray | c Sonal Dinusha b Wanindu Hasaranga | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Lakshan Edirisinghe | lbw b Wanindu Hasaranga | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Hashan Dumindu | c Wanindu Hasaranga b Lahiru Samarakoon | 9 | 20 | 1 | 0 | 45.00 |
Dunith Wellalage | b Ashan Priyanjan | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Pasindu Sooriyabandara | b Lahiru Samarakoon | 10 | 19 | 2 | 0 | 52.63 |
Pathum Kumara | c Minod Bhanuka b Sonal Dinusha | 78 | 120 | 5 | 1 | 65.00 |
Suminda Lakshan | lbw b Sonal Dinusha | 41 | 60 | 3 | 0 | 68.33 |
Kavishka Anjula | b Wanindu Hasaranga | 26 | 53 | 2 | 0 | 49.06 |
Mohammad Shiraz | not out | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Asanka Manoj | lbw b Wanindu Hasaranga | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 2, w 1, pen 0) |
Total | 187/10 (53.2 Overs, RR: 3.51) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lahiru Samarakoon | 9 | 1 | 42 | 3 | 4.67 | |
Ashan Priyanjan | 15 | 2 | 37 | 1 | 2.47 | |
Wanindu Hasaranga | 17.2 | 1 | 64 | 4 | 3.72 | |
Sonal Dinusha | 10 | 0 | 32 | 2 | 3.20 | |
Dushan Hemantha | 2 | 0 | 11 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abishek Liyanarachchi | run out (Heshan Hettiarchchi) | 6 | 11 | 1 | 0 | 54.55 |
Sonal Dinusha | c Pasindu Sooriyabandara b Asanka Manoj | 59 | 196 | 7 | 0 | 30.10 |
Pavan Rathnayake | lbw b Mohammad Shiraz | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Sanoj Darshika | c Pathum Kumara b Mohammad Shiraz | 10 | 25 | 2 | 0 | 40.00 |
Minod Bhanuka | c Hashan Dumindu b Sangeeth Cooray | 11 | 9 | 2 | 0 | 122.22 |
Ashan Priyanjan | c Sohan de Livera b Mohammad Shiraz | 39 | 91 | 6 | 0 | 42.86 |
Wanindu Hasaranga | c Hashan Dumindu b Asanka Manoj | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dushan Hemantha | c Sohan de Livera b Mohammad Shiraz | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Chamindu Wijesinghe | c Sohan de Livera b Mohammad Shiraz | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Ranitha Liyanarachchi | b Suminda Lakshan | 45 | 58 | 3 | 2 | 77.59 |
Lahiru Samarakoon | not out | 10 | 13 | 0 | 0 | 76.92 |
Extras | 9 (b 1 , lb 2 , nb 4, w 2, pen 0) |
Total | 196/10 (71.2 Overs, RR: 2.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kavishka Anjula | 8 | 2 | 28 | 0 | 3.50 | |
Mohammad Shiraz | 24 | 4 | 52 | 5 | 2.17 | |
Sangeeth Cooray | 11 | 3 | 28 | 1 | 2.55 | |
Suminda Lakshan | 5.2 | 0 | 20 | 1 | 3.85 | |
Asanka Manoj | 16 | 3 | 40 | 2 | 2.50 | |
Dunith Wellalage | 7 | 0 | 25 | 0 | 3.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sohan de Livera | c Wanindu Hasaranga b Lahiru Samarakoon | 17 | 17 | 2 | 1 | 100.00 |
Sangeeth Cooray | c Minod Bhanuka b Lahiru Samarakoon | 5 | 7 | 0 | 0 | 71.43 |
Lakshan Edirisinghe | c Sonal Dinusha b Ashan Priyanjan | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Pasindu Sooriyabandara | b Wanindu Hasaranga | 19 | 19 | 2 | 0 | 100.00 |
Hashan Dumindu | lbw b Lahiru Samarakoon | 11 | 34 | 0 | 0 | 32.35 |
Pathum Kumara | c Abishek Liyanarachchi b Wanindu Hasaranga | 36 | 64 | 6 | 0 | 56.25 |
Dunith Wellalage | not out | 52 | 79 | 5 | 0 | 65.82 |
Suminda Lakshan | c Wanindu Hasaranga b Lahiru Samarakoon | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kavishka Anjula | lbw b Wanindu Hasaranga | 27 | 36 | 2 | 1 | 75.00 |
Mohammad Shiraz | lbw b Wanindu Hasaranga | 2 | 15 | 0 | 0 | 13.33 |
Asanka Manoj | b Wanindu Hasaranga | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 1 , lb 7 , nb 3, w 1, pen 0) |
Total | 182/10 (47.3 Overs, RR: 3.83) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lahiru Samarakoon | 12 | 0 | 60 | 4 | 5.00 | |
Ashan Priyanjan | 13 | 4 | 42 | 1 | 3.23 | |
Wanindu Hasaranga | 15.3 | 2 | 44 | 5 | 2.88 | |
Ranitha Liyanarachchi | 2 | 0 | 10 | 0 | 5.00 | |
Chamindu Wijesinghe | 3 | 1 | 6 | 0 | 2.00 | |
Sonal Dinusha | 2 | 0 | 11 | 0 | 5.50 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<