IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!

Indian Premier League 2024

66
Indian Premier League 2024

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

>>பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மாறும் அஷார் மஹ்மூட்

வனிந்து ஹஸரங்க சன்ரைஸர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருந்த போதும் உபாதை காரணமாக அவர் அணியுடன் இணைந்துக்கொள்ளவில்லை. தற்போது இவர் முழுமையான தொடரிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஹஸரங்க அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹஸரங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார்.

வியாஸ்காந்த் இலங்கை தேசிய அணியில் இதுவரை அறிமுகமாகாத போதும், லங்கா பீரிமியர் லீக் (LPL), பங்களாதேஷ் பிரீமியர் லீக், அபு தாபி T10 மற்றும் ILT20 போன்ற தொடர்களில் விளையாடி சர்வதேச அனுபவத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<