FFSL தலைவர் கிண்ணத்தோடு கைகோர்க்கும் வன்டேஜ்

287

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடருக்கான பிரதான அனுசரணையாளர்களாக வன்டேஜ் நிறுவனம் இணைந்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் எந்தவித கால்பந்து போட்டிகளும் இடம்பெறாத நிலையில், தற்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் இந்த புதிய தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

FFSL தலைவர் கிண்ண மோதல்கள் எவ்வாறு உள்ளன?

இந்தநிலையில், எப்.. கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கு தொடர்ச்சியாக அனுசரணையாளர்களாக இணைந்திருந்த வன்டேஜ், இம்முறை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடருக்கு அனுசரணை வழங்கவுள்ளது.

20 அணிகளின் பங்கேற்புடன் இடம்பெறும் இந்த தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஒரு மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரின் முதல் சுற்று குழு நிலையாக இடம்பெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுகள் நொக் அவுட் முறையில் இடம்பெறும்.  

குழு நிலையைப் பொறுத்தவரையில், மொத்தம் 5 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு குழுவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. குழு நிலையில் அனைத்து அணிகளும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் முடிவில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தைப் பெறும் அணிகள் ஐந்துடன் சேர்த்து, சிறந்த பெறுபேறைப் பெறும் ஏனைய 3 அணிகள் என மொத்தமாக 8 அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்கு தகுதி பெறும்

Video – 1933 இன் சாதனையை சமன் செய்த RONLADO ! | FOOTBALL ULLAGAM

ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முடிவடையும். ஆகஸ்ட் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் காலிறுதிப் போட்டிகளும், ஆகஸ்ட் 27 ஆம் திகதி அரையிறுதிப் போட்டியும் நடைபெற்று, தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் மாத இறுதியில் இடம்பெறும்இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பெரும் தொகைப் பணம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

FFSL தலைவர் கிண்ண குழுநிலை அணிகள்

  • குழு A – ப்ளூ ஸ்டார் வி., அப் கண்ட்ரி லயன்ஸ் வி., ஜாவா லேன் வி., மொரகஸ்முல்ல வி.
  • குழு B – ரினௌன் வி., மாத்தறை சிட்டி கழகம், நியூ யங்ஸ் கா., நிவ் ஸ்டார் வி. 
  • குழு C – டிபெண்டர்ஸ் கா., ரெட் ஸ்டார்ஸ் கா., சௌண்டர்ஸ் வி., சுப்பர் சன் வி.
  • குழு D – சீ ஹோக்ஸ் கா., ரத்னம் வி., பொலிஸ்  வி., செரண்டிப் கா.
  • குழு E – கொழும்பு கா., புளூ ஈகல்ஸ் வி., க்ரிஸ்டல் பெலஸ் கா., SLTB வி.

போட்டி அட்டவணை