தீவிரவாத குற்றச்சாட்டில் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் கைது

451
Image Courtesy- Fox Sports

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜாவின் சகதோரர் அர்சலன் கவாஜா, அவரது நண்பர் ஒருவரை தீவிரவாத குற்றச்சாட்டு ஒன்றில் சிக்கவைக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் நியூவ் சௌத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

நிறவெறியினால் ஒதுக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா

அவுஸ்திரேலியர்கள் உலகின் மிகச் சிறந்த…

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட உஸ்மான் கவாஜா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது, ஆஸி. தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்றார். முன்னணி இடதுகை துடுப்பாட்ட வீரரான இவருக்கு, டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு தற்போது அதிக வாய்ப்புகள் கிடைத்து வருவதுடன், எதிர்வரும் இந்திய தொடருக்கான குழாத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் கவாஜாவின் சகோதரரான அர்சலன் கவாஜா, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த அவரது நண்பர் கமிர் நிலார் நிஜாமுதீனை தீவராவாதி என சித்தரித்துள்ளார். அத்துடன் நிஜாமுதீன், முன்னாள் பிரதமர் மெல்கொல்ம் டர்ன்புல்லை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, கமிர் நிலார் நிஜாமுதீனை நியூவ் சௌத் வேல்ஸ் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த விசாரணையின் போது நிஜாமுதீன், பிரதமரை கொலைசெய்வதற்கான திட்டத்துக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை தெரிவித்திருந்தார். எனினும், நிஜாமுதீனின் தங்குமிடத்தை பொலிஸார் சோதனையிட்ட போது, அவரது பல்கலைக்கழக குறிப்பேட்டில் பிரதமரை கொலை செய்வதற்கான திட்டங்கள் தொடர்பில் எழுதப்பட்டிருந்தமையை கண்டுபிடித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த விடயத்தை தான் எழுதவில்லை எனவும், குறிப்பிட்ட கையெழுத்து தன்னுடையது இல்லை எனவும் நிஜாமுதீன் குறிப்பிட்டார். பின்னர், கையெழுத்தை ஆராய்ந்த பொலிஸார், அது நிஜாமுதீனுடையது அல்ல என்பதை உறுதிசெய்து அவரை விடுவித்தனர். தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த கையெழுத்து, அர்சலன் கவாஜாவுடையது என்பதை உறுதிசெய்து, அவரை கவாஜாவின் வீட்டில் வைத்து இன்று (04) கைதுசெய்தனர்.

பாகிஸ்தானின் வெற்றியை பறித்த உஸ்மான் கவாஜாவின் துடுப்பாட்டம்

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா …..

பின்னர், பரமாட்டா உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்ட அர்சலன் கவாஜா பிணை கோரிய நிலையில், அரச நீதியை மீறியமை மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுக்காக போலியான ஆவணங்களை தயார் செய்தமை குறித்த காரணங்களுக்காக நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, அர்சலன் கவாஜா போலியான ஆவணங்களை தயாரித்து, நிஜாமுதீனை தீவிரவாதியாக சித்தரிக்க முற்பட்டமைக்கான காரணம், இருவருக்கும் இடையில் ஒரு பெண்ணை காதிலிப்பது தொடர்பில் ஏற்பட்டிருந்த போட்டிதான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உஸ்மான் கவாஜா,

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்யவேண்டும். அவர்கள் விசாரணை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் நான் கருத்து வெளியிடுவது சரியாக இருக்காது. அத்துடன், இதுபோன்ற தருணத்தில் எனது மற்றும் எனது குடும்பத்தின் தனிப்பட்ட விடயங்களுக்கு தயவுசெய்து மரியாதை கொடுக்கவும்என ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<