நிறவெறியினால் ஒதுக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா

1653
Usman Khawaja

அவுஸ்திரேலியர்கள் உலகின் மிகச் சிறந்த இன வெறியர்கள் என்பது உலகம் அறிந்த விடயம். வெள்ளை இனத்தவர்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பது அவர்களது தாழ்மையான எண்ணம். மற்ற எவரையும் அவர்கள் திறமையானவர்களாக அங்கீகரிப்பதில்லை.

அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் முன்னிலை அணியாக விளங்குகின்ற அவுஸ்திரேலியாவில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விளையாடும் போது இனவெறியான செயற்பாடுகளில் அந்நாட்டு ரசிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒரு விடயமாகவும் மாறிவிட்டது. இதற்கு முன்பு இந்திய, இலங்கை வீரர்கள் மற்றும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும் இதுபோன்ற இனவெறி இழிவுபடுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

முன்பு இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களே இன வெறியை வெளிப்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்து, பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

அதேபோன்று, கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் சுற்றுத் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதன்போது இங்கிலாந்து அணிக்கும் நியூ சௌத் வேல்ஸ் அணிக்கும் இடையில் சிட்னியில் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்றது. சீக்கிய இனத்தவரான இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் மொண்டி பனீசரும், தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த வெள்ளை இனத்தவரான கெவின் பீட்டர்சனும் இப்போட்டியில் விளையாடியிருந்தனர். எனினும் இப்போட்டியின் போது மொண்டி பனீசரையும், கெவின் பீட்டர்சனையும் அவுஸ்திரேலிய ரசிகர்கள் படு துவேசமாக விமர்சித்து தங்களது இன வெறியை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை வரலாறுகள் சான்று பகர்கின்றன.

இந்நிலையில், உலக கிரிக்கெட்டின் பிக் 3 நாடுகளில் ஒன்றாக விளங்குகின்ற அவுஸ்திரேலிய அணியிலும், நிற பேதம் மற்றும் இன பாகுபாடுகளைக் கொண்டு வீரர்களை அணிக்குத் தெரிவு செய்கின்ற நடைமுறை அரிதாக இருந்தாலும், அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து ஒரு சில போட்டிகளில் விளையாடி வருகின்ற பாகிஸ்தான் வம்சாவளி வீரரான உஸ்மான் கவாஜா நிற பேதம் மற்றும் இனவெறி விமர்சனங்கள் காரணமாக தான் சிறு வயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக முதற்தடவையாக தெரிவித்துள்ளமை விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையுடனான ஒரு நாள் தொடரிலிருந்து ஆமிர் விலகல்

வலது கால் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஐந்து….

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 419 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆனார். இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் வரம் பெற்ற முதல் முஸ்லிம் வீரராகவும், 7 ஆவது வெளிநாட்டு வீரராகவும் இடம்பிடித்தார்.

இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின்போது சக வீரர்களான ஷேன் வொட்சன் மற்றும் மிட்செல் ஜொன்சன் ஆகியோருடன் ஏற்பட்ட தகராறினால் போட்டித் தடைக்குள்ளான உஸ்மான் கவாஜா, சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் மீண்டும் விளையாடி முதலாவது டெஸ்ட் சதத்தையும் பெற்றுக்கொண்டார்.

எனினும், இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45.47 என்ற சராசரியுடன் 1728 ஓட்டங்களைக் குவித்துள்ள உஸ்மான் கவாஜா, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரிற்கான குழாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 30 வயதான பாகிஸ்தான் வம்சாவளி வீரரான உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் வொய்ஸ் (playersvoice.com.au) என்ற இணையத்தளத்துக்கு அளித்த விசேட பேட்டியில் கூறியதாவது,

சிட்னியில் இளம் வீரராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்களை சந்தித்து இருக்கிறேன். இதனால் அவுஸ்திரேலிய அணியை ஆதரிக்க முடியாத அளவுக்கு கோபம் அடைந்து இருக்கிறேன். வீரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வசைபாடுதலை சந்திக்க கடுமையான மனம் வேண்டும். சில வசைகளை வெளியில் சொல்ல முடியாது. ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள மாட்டேன். அவை இன்னும் கூட என்னை காயப்படுத்துகின்றன. அதனை நான் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டேன். நான் ஓட்டங்களைக் குவிக்கும் போதெல்லாம் நிறவெறி வசையை வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறேன். இதனை சில வீரர்களின் பெற்றோர் மிகவும் பாரதூரமாக எடுத்து கொள்வதையும் பார்த்து இருக்கிறேன். இந்த நிறவெறி போக்கு தான் அவுஸ்திரேலியாவில் பிறக்காத என்னுடைய நண்பர்கள் பலர் விளையாட்டில் அவுஸ்திரேலிய அணியை ஆதரிக்காததற்கு காரணமாகும். நானும் கூட அப்படித்தான் இருந்தேன். கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய அணித் தேர்வில் நிறவெறியும், அரசியலும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளாக இருக்கலாம், அல்லது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நிறவெறிப்போக்குகளைப் பார்த்திருக்கிறேன். இந்த நிறவெறி மனநிலைதான், வெள்ளையர் அல்லாதவர்கள் அவுஸ்திரேலிய அணிக்குள் வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. இதனால் பலர் விளையாட்டில் இருந்து விலகி இருக்கின்றனர் என்பதை பலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக…

நான் அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியிருக்கலாம். என்னை கருப்பு இந்தியர் அல்லது பாகிஸ்தானி என்று கருதி அணிக்குத் தேர்வு செய்யப்படாத சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால் நான் விளையாடுவதை நிறுத்திவிட்டேன். இந்த வாசகங்களை நான் என் வாழ்நாள் முழுதும் என் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மட்டுமன்றி எதேச்சையாக யாரையாவது சந்தித்தால் கூட சொல்வது உண்டு.

அதிலும் குறிப்பாக நான் மது அருந்தவில்லையெனில் அவுஸ்திரேலியன் அல்ல என்று போதிக்கப்பட்டது. ஆனால் நான் வளர்ந்து விட்டேன் அவுஸ்திரேலியாவும் வளர்ந்து விட்டது. நிறைய விடயங்கள் நிறைய மாறிவிட்டன.

நானும் பலரைப்போல் கிரிக்கெட்டை விட்டு போயிருப்பேன், என் அம்மா கூட 10 ஆம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட் வேண்டாம் படிப்பில் கவனம் செலுத்து என்றார். ஒரு சராசரியான ஆசிய நாட்டைச் சேர்ந்த அம்மாவாக அவர் இருந்தார். ஆனால் என் தந்தை நான் இரண்டையும் செய்ய முடியும் என்று எனக்கு ஊக்கமளித்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடுவதை விடுவோம். ஆனால் அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கழகமான நியூ சௌத் வேல்ஸ் கழகத்துக்கு விளையாடுவதுதான் மிகவும் கடினம் என்றார்.

இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயண போட்டி அட்டவணை வெளியீடு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை…

எனவே, அவுஸ்திரேலிய கிரிக்கெட் மெதுவாக மாற்றமடைந்து வருகிறது. அவுஸ்திரேலியா என்றால் உண்மையில் என்னவென்பதை அது பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. பலதரப்பட்ட மக்கள் தொகையை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச அணியாக மாறி வருகின்றது என அவர் தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் படி இனவெறி கருத்துக்களை தெரிவித்தாலோ அல்லது பேசினாலோ, வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, அந்த நாட்டின் மீது ஆயுட்கால தடை விதிக்க முடியும். ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டு அணிகளும் இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகின்றபோதிலும் இதுவரை அவுஸ்திரேலிய அணி மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக இனவெறி மற்றும் கறுப்பின வீரர்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற பாகுபாடு காரணமாக ஒரு காலத்தில் தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் உறுப்புரிமைய சர்வதேச கிரிக்கெட் பேரவை ரத்து செய்தமை அனைவரும் அறிந்த விடயம்.

எனவே, விளையாட்டில் நிற பேதம் மற்றும் இன பாகுபாட்டுக்கு முன்னுரிமை அளித்தால் ஒருபோதும் அந்த நாடு விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் அடையாது. மாறாக இன, மத, மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் அனைத்து தரப்பிலும் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் ஒரு புறத்தில் விளையாட்டு முன்னேற்றம் காணும். மறுபுறத்தில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட்டு எந்தவொரு முரண்பாடுகளுமின்றி அனைத்து மக்களும் விளையாட்டை நேசிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.