கொரோனவினால் சம்பள இழப்பை சந்திக்கவுள்ள அமெரிக்க கிரிக்கெட் வீரர்கள்

69
PETER DELLA PENNA

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்க கிரிக்கெட் சபை தமது நாட்டு வீரர்களுக்கு சம்பள குறைப்பினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கின்றது. 

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இணையும் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்……

கொரோனா வைரஸினால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கினற்து. இந்த வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 350,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், நிதிரீதியான நெருக்கடிகளை கருத்திற்கொண்டே அமெரிக்காவின் கிரிக்கெட் சபை வீரர்களுக்கு சம்பளக்குறைப்பினை மேற்கொள்ளவிருக்கின்றது.    

அதன்படி, அமெரிக்க கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் வரையில் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் குறைந்தது 50% இணையேனும் இழப்பார்கள் என நம்பப்படுகின்றது. 

அமெரிக்க கிரிக்கெட் சபை கடந்த வருடத்திலேயே தமது நாட்டு வீரர்களுக்கு முதல்தடவையாக ஒப்பந்தங்களை வழங்கியிருந்தது. இதன் மூலம் அமெரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் சராசரியாக 70,000 டொலர்களை (இலங்கை நாணயப்படி 13.5 மில்லியன்) வருடம் ஒன்றுக்கு பெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வீரர்களுக்கு வருடம் ஒன்றுக்கு கிடைக்கும் சராசரி ஒப்பந்த தொகையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.  

அதேநேரம் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க கிரிக்கெட் அணி ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுடன் இம்மாத ஆரம்பத்தில் விளையாடவிருந்த முக்கோண ஒருநாள் தொடரும் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. அதோடு, அமெரிக்க கிரிக்கெட் அணி ஜூன் மாதத்தில் நெதர்லாந்துக்கு மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணமும் இரத்துச் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது மாத்திரமின்றி கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களும் மேலதிக அறிவிப்பு வரும் வரையில் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. 

இவ்வாறாக கொரோனா வைரஸின் ஊடுருவல், கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்துவருகின்ற அமெரிக்காவிற்கு ஒரு முட்டுக்கட்டையாக மாறியிருப்பதனால் அந்நாட்டு வீரர்களும், இரசிகர்களும் மிகுந்த கவலைக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<