எப்.ஏ கிண்ண காலிறுதியில் மோதப்போகும் அணிகள்

654
Vantage FA Cup

வான்டேஜ் நிறுவனத்தின் அணுசரனையில் இடம்பெறும் 2018ஆம் ஆண்டுக்கான எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கான குலுக்கல் நிகழ்வு இன்று (05) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மூன்று நிமிடங்களில் ஜாவா லேனின் எதிர்பார்ப்பை உடைத்த கொழும்பு அணி

ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான மிகவும்..

நொக் அவுட் முறையிலான போட்டிகளாக இடம்பெறும் இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் முக்கிய மோதல்களைக் கொண்ட காலிறுதிக்கு முன்னைய சுற்றின் 6 போட்டிகள் இடம்பெற்றன. 

காலிறுதிக்கு முன்னைய சுற்று முடிவுகள்

  • நியு யங்ஸ் கா.க 4 – 0 ரெட் சன் வி.க
  • இராணுவப்படை வி.க 3 – 0 நியு ஸ்டார் வி.க
  • பொலிஸ் வி.க 3 – நீகொழும்பு யூத் கா.க
  • ரினௌன் வி.க 4 – 0 விமானப்படை வி.க
  • சௌண்டர்ஸ் வி.க 6 – 2 எவரெடி வி.க
  • கொழும்பு கா.க 3 – 1 ஜாவா லேன் வி.க

அதேபோன்று, குறித்த சுற்றுக்கான இரண்டு போட்டிகள் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன. இதன் ஒரு போட்டியில் சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணம் புனித நிக்கீலர் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளதுடன், அடுத்த போட்டியில் SLTB விளையாட்டுக் கழகம் மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் என்பன மோதவுள்ளன.

அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள காலிறுதிச் சுற்றுக்கான போட்டிகள் நான்கும் இம்மாதம் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

விமானப்படைக்கு எதிராக வித்தை காண்பித்த இளம் ரினௌன் காலிறுதியில்

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின்…

காலிறுதிக்கான போட்டி விபரம்

அணி 1 அணி 2
சிறைச்சாலை வி.க / புனித நிக்கீலர் வி.க சௌண்டர்ஸ் வி.க
கொழும்பு கா.க நியு யங்ஸ் கா.க
ரினௌன் வி.க பொலிஸ் வி.க
இலங்கை இராணுவப்படை வி.க SLTB வி.க / உருத்திரபுரம் வி.க