முதல் டெஸ்ட் போட்டியில் மாற்றுவீரராக ஷேய் ஹோப் இணைப்பு

West Indies tour of Sri Lanka 2021

166
 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் ஜெரமி சொலொன்ஷோவுக்கு பதிலாக மாற்றீடு வீரராக ஷேய் ஹோப் இணைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.

>>T10 லீக்கில் விளையாடவுள்ள மேலும் இரு இலங்கை வீரர்கள்!

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டமான நேற்றைய தின (21), மதியபோசன இடைவேளைக்கு முன்னர், திமுத் கருணாரத்ன வேகமாக அடித்த பந்து ஒன்று, ஷோர்ட் லெக் (Short Leg) பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட மே.தீவுகளின் அறிமுக வீரர் ஜெரமி சொலேன்ஷோவின் ஹெல்மட்டில் பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவந்த ஜெரமி சொலேன்ஷோவின் உடல்நிலை சரியாகி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இந்த போட்டியில் விளையாடுவதற்கான சரியான உடற்தகுதியுடன் இல்லை என்பதால், மாற்று வீரராக (concussion substitute) ஷேய் ஹோப் இணைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை, பந்து தலையில் தாக்கினால், குறித்த வீரரை போன்று, மற்றுமொரு வீரரை அணியில் இணைக்க முடியும். அந்தவகையில், துடுப்பாட்ட வீரரான ஜெரமி சொலேன்ஷோவுக்கு பதிலாக மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான ஷேய் ஹோப் இணைக்கப்பட்டுள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்துள்ள இலங்கை அணி, 386 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<