மரடோனாவின் மரணத்திற்கு காரணம் மருத்துவ அதிகாரிகளா??

68

அர்ஜன்டீனா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மரணத்தினை தடுக்க தவறினர் என்கிற குற்றச்சாட்டில், அவரினை பராமரித்த மருத்துவ அதிகாரிகள் எட்டுப்பேர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர். 

கடந்த 2020ஆம் ஆண்டு டியாகோ மரடோனா இரத்தக்கசிவு ஒன்றுக்காக மேற்கொள்ளப்பட்ட மூளை சத்திரசிகிச்சை ஒன்றில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் தன்னுடைய 60ஆவது வயதில் உயிரிழந்தார்

WATCH – சம்பியன்ஸ் லீக் மூன்றாம் வாரத்தில் அசத்திய அணிகள் | FOOTBALL ULAGAM

அதேநேரம் கொக்கெயின் என்னும் போதைப் பொருள் மற்றும் மதுவிற்கு அடிமையாகியிருந்த மரடோனா அதிலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தினை பல தசாப்தங்களாக மேற்கொண்டிருந்த போதே  அவரது மரணமும் சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த புதன்கிழமை (22) வெளியாகிய அறிக்கை ஒன்றின் அடிப்படையில் இந்த மரணத்திற்கு மரடோனாவினைப் பராமரித்த எட்டு மருத்துவ அதிகாரிகளின் பொறுப்பற்ற தனமே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதோடு, அதன் அடிப்படையிலேயே அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த எட்டு நபர்களின் குற்றங்கள் உறுதியாகும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு 8 தொடக்கம் 25 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெற்றிநடை போடும் மாத்தறை சிடி, செரண்டிப்; சென் மேரிஸ் முதல் வெற்றி

”பெலுசோ” என்னும் புனைப்பெயருடன் அழைக்கப்படும் டியாகோ மரடோனா கால்பந்து விளையாட்டு இனம் கண்ட மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதோடு, 1986ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்தினை அர்ஜன்டீன அணி வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்தார்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<