U23 ஒருநாள் போட்டித் தொடர் ஜூலை மாதம் 04ஆம் திகதி ஆரம்பம்

702
U23 One-Day tournament

23 வயதிற்குட்பட்டோருக்கான 20 நாட்களைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் ஜூலை மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் 4ஆம் திகதி ராகம கிரிக்கட் கழகம் மற்றும் இராணுவ விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகள் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் மோதுகின்றன. அத்தோடு இந்தத் தொடரின் இறுதிப்  போட்டி ஜூலை மாதம் 24ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் 14 அணிகள் 3 நாட்களைக் கொண்ட பிரிவு ஒரு போட்டிகளாக விளையாடினார்கள். இதில் விளையாடும் வீரர்களுக்குத், தமது திறனை வெளிக்காட்டி இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து விளையாட ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்தது.

இலங்கை கிரிக்கட் தொடர்களை தீர்மானிக்கும் குழு இந்த U23 ஒருநாள் போட்டித் தொடரை 4 குழுக்களாகப் பிரித்து நடாத்த உள்ளது. அந்த அடிப்படையில் மொத்தமாக 23 அணிகள் இந்தத் தொடரில் பங்குபற்ற உள்ளன. கடந்த பருவகாலத்தில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலேயே தான் இவ்வாறு 4 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் இறுதிப் போட்டியில் மழை குறிக்கிட்டதனால் இறுதிப் போட்டியில் விளையாடிய முவர்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் ஆகிய அணிகள் கூட்டுச் சம்பியனாகியது.

இரண்டாம் பிரிவு அணிகள் பங்குபற்றும் போட்டித் தொடரில் 45 அணிகள் 8 குழுக்காளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தொடரின் முதலாவது போட்டி ஜூலை மாதம் 02ஆம் திகதி கட்டுநேரியவில் ஆரம்பமாகிறது. இதில் லியோ கிரிக்கட் கழக அணி எக்ஸ்விரைட்ஸ் கிரிக்கட் கழக அணியை எதிர்கொள்கிறது.

ஆரம்பக்கட்ட போட்டிகள் லீக் முறையில் நடைபெறவுள்ளதோடு குழுக்களில் முதல் 2 இடத்தைப் பெரும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறும்.  50 ஓவர்கள் கொண்ட இந்தத் தொடர் முடிவுற்ற பிறகு 2 வாரங்களில் 23 வயதிற்குட்பட்டோர் முதலாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான டி20 போட்டித் தொடர் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Division One Participating Teams

Group A Group B Group C Group D
Tamil Union C & AC Moors SC Ragama CC Galle CC
NCC CCC Colts CC SSC
Negombo CC Saracens SC Army SC Chilaw Marians CC
Bloomfield BRC SL Ports Authority CC Badureliya CC
Navy SC Air Force SC Kurunegala Youth CC Kalutara Town CC
Panadura SC Police SC Lankan CC

Under 23 Division 1 Tournament – Full Fixtures
Date Home Opponent Venue
4th July Ragama CC Army SC Thurstan
5th July Saracens SC BRC Surrey
6th July Tamil Union C & AC NCC P Sara
Bloomfield C & AC Navy SC Bloomfield
Negombo CC Panadura SC Kadirana
Moors SC CCC Moors
Colts CC Ragama CC Colts
Kurunegala Youth CC Police SC Welagedara
Galle CC SSC SSC
Chilaw Marians CC Badureliya CC FTZ
7th July Kalutara Town CC Lankan CC Surrey
Army SC SL Ports Authority CC Panagoda
9th July Bloomfield C & AC Tamil Union C & AC Bloomfield
NCC Panadura SC NCC
Navy SC Negombo CC Welisara
Saracens SC Moors SC Moors
CCC Air Force SC CCC
Kurunegala Youth CC Colts CC Dambulla
SL Ports Authority CC Police SC Kadirana
Chilaw Marians CC Galle CC FTZ
SSC Kalutara Town CC SSC
Lankan CC Badureliya CC Panagoda
10th July Tamil Union C & AC Navy SC P.Sara
Negombo CC NCC Kadirana
Panadura SC Bloomfield C & AC Panadura
Moors BRC Moors
Air Force SC Saracens SC TBC
SL Ports Authority CC Ragama CC FTZ
Colts CC Police SC Colts
Army SC Kurunegala Youth CC Panagoda
SSC Lankan CC SSC
Kalutara Town CC Chilaw Marians CC Surrey
12th July Badureliya CC Galle CC Surrey
Lankan CC Chilaw Marians CC FTZ
13th July NCC Navy SC NCC
Bloomfield C & AC Negombo CC Bloomfield
Panadura SC Tamil Union C & AC Panadura
BRC CCC CCC
Moors SC Air Force SC Moors
Colts CC SL Ports Authority CC Colts
Police SC Army SC Panagoda
Galle CC Kalutara Town CC Surrey
14th July Ragama CC Kalutara Town CC Thurstan
SSC Badureliya CC SSC
15th July BRC Air Force SC FTZ
Badureliya Kalutara Town CC Surrey
16th July Tamil Union C & AC Negombo CC P.Sara
NCC Bloomfield C & AC NCC
Navy SC Panadura SC Welisara
CCC Saracens SC CCC
Police SC Ragama CC Dambulla
Army SC Colts CC Panagoda
Kurunegala Youth CC SL Ports Authority CC Welagedara
Galle CC Lankan CC Surrey
Chilaw Marians SSC FTZ
19th July Quarter Final 1 NCC
Quarter Final 2 Colts
Quarter Final 3 CCC
Quarter Final 4 Moors
  22nd July Semi Final 1 SSC
Semi Final 2 NCC
24th July Final SSC

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்