யூரோ 2020 சம்பியன் கிண்ணம் இத்தாலிக்கு

UEFA EURO 2020

366

மிகவும் விறுவிறுப்பாக சென்ற யூரோ 2020 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின் முடிவில் பெனால்டி முறையில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி தொடரின் சம்பியன்களாக மகுடம் சூடியக்கொண்டது.  

முன்னர் நடைபெற்று முடிந்த ஸ்பெயின் அணியுடனான அரையிறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையடைய, பெனால்டி நிறைவில் 4-2 என வெற்றி பெற்ற இத்தாலி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.  

மேலதிக நேரத்தில் டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதி மோதலில்

பெனால்டியில்‌ ‌ஸ்பெயினை‌ ‌வென்று‌ ‌இறுதிப்‌ ‌போட்டிக்கு‌ ‌சென்ற‌ ‌இத்தாலி‌

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என டென்மார்க் அணியை வீழ்த்தி சுமார் 55 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னணி தொடர் ஒன்றில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. 

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கோட்டையாகக் கருதப்படும் லண்டன் வெம்ப்லி அரங்கில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்கள் இத்தாலிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 

இதன்போது, மத்திய களத்தில் இருந்து அணித் தலைவர் Harry Kane வழங்கிய பந்தை Kieran Trippier உயர்த்தி இத்தாலி கோல் எல்லைக்கு செலுத்தினார். இதன்போது இத்தாலி பின்கள வீரர்கள் அனைவருக்கும் பின்னால் வந்த Luke Shaw, வந்த வேகத்தில் இடது காலால் பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார். 

இத்தாலி அணி முதல் பாதியில் மேற்கொண்ட முதல் முயற்சியாக Federico Chiesa 35ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இருந்து பந்தை எடுத்துச் சொன்று கோல் நோக்கி உதைந்த பந்து வலது பக்க கம்பத்தை அண்மித்து வெளியே சென்றது. 

முதல் கோல் பெறப்பட்ட பின்னரும் இங்கிலாந்து வீரர்கள் தமது அடுத்த கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் இத்தாலி 30 நிமிடங்களின் பின்னரே போட்டியில் தமக்கான கோல் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. 

மெஸ்ஸிக்கு முதல் கிண்ணத்தையும் நெய்மாருக்கு கண்ணீரையும் கொடுத்த போட்டி

எனினும், போட்டியின் ஆரம்பம் முதல் இங்கிலாந்து பின்கள வீரர்கள் சிறந்த முறையில் பந்தை தடுத்தும், பரிமாற்றம் செய்தும் விளையாடினர். எனவே, Shaw பெற்ற கோலோடு முதல் பாதி நிறைவின்போது இங்கிலாந்து முன்னிலை பெற்றது. 

முதல் பாதி: இங்கிலாந்து 1 – 0 இத்தாலி  

போட்டியின் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் இங்கிலாந்து கோல் எல்லைக்குள் பந்தை எடுத்து வந்த Chiesa, கோல் நோக்கி உதைந்த பந்தை இங்கிலாந்து கோல் காப்பாளர் Jordan Pickford தடுத்தார். 

அடுத்த 6 நிமிடங்களின் பின் இத்தாலிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்து பல வீரர்களின் ஹெடருக்கும் தடுப்புக்களுக்கும் பின்னர் Leonardo Bonucci மூலம் கோலாக்கப்பட, ஆட்டம் 1-1 என சமநிலையடைந்தது. 

அதன் பின்னரும் இத்தாலி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியபோதும் கோல்கள் எதுவும் பெறப்படவில்லை. 

முதல் பாதிக்கு மாற்றமாக, இத்தாலி வீரர்களின் ஆதிக்கத்துடன் நிறைவுபெற்ற இரண்டாம் பாதியின் நிறைவில் கோல்கள் 1-1 என சமநிலையடைய கிண்ணத்திற்கான வெற்றி கோலைப் பெறுவதற்கு போட்டியில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.  

புதிய வெற்றியாளர் ஒருவரை நோக்கி நகரும் 2020 யூரோ!| FOOTBALL ULAGAM  

முழு நேரம்: இங்கிலாந்து 1 – 1 இத்தாலி 

ஏற்கனவே இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் மேலதிக நேரம் வரை சென்ற நிலையில், இறுதிப் போட்டியும் மேலதிக நேரம் வரை சென்றது ரசிகர்களுக்கு பெரிதும் பூரிப்பை ஏற்படுத்தியது. 

மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் மிகவும் வேகமாக விளையாடியதால் அடுத்தடுத்து கோல்களுக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டன. எனினும், இரண்டு அணிகளினதும் கோல் காப்பாளர்களும் பின்கள வீரர்களும் அனைத்து முயற்சிகளையும் தடுத்தமையினால், மேலதிக நேரமும் கோல்கள் எதுவும் இன்றி நிறைவு பெற்றது. 

இதனால் யூரோ 2020 கிண்ணத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிப்பதற்காக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது இங்கிலாந்து வீரர்கள் 3 உதைகளை தவறவிட, இத்தாலி 2 உதைகளை தவறவிட்டது. எனவே, முடிவில் 3-2 என வெற்றி பெற்ற இத்தாலி அணி யூரோ 2020 சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.   

மேலதிக நேர நிறைவில்: இங்கிலாந்து 1 – 1 இத்தாலி

பெனால்டி முடிவு: இங்கிலாந்து 2 – 3 இத்தாலி

கோல் பெற்றவர்கள் 

  • இங்கிலாந்து – Luke Shaw 2‘
  • இத்தாலி – Leonardo Bonucci 67‘

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<