விறுவிறுப்பான போட்டியின் பின் காலிறுதிக்குச் சென்ற ஸ்பெயின், சுவிட்சர்லாந்து

UEFA EURO 2020

94
 

யூரோ 2020 கால்பந்து தொடரில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதி 16 அணிகள் சுற்றுக்கான இரண்டு ஆட்டங்களின் நிறைவில் குரோசியாவை வீழ்த்தி ஸ்பெயினும், பிரான்ஸை பெனால்டியில் வீழ்த்தி சுவிட்சர்லாந்தும் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. 

குரோசியா எதிர் ஸ்பெயின்   

முன்னர் இடம்பெற்ற தொடரின் லீக் சுற்றில், D குழுவில் இரண்டாம் இடம் பெற்ற குரோசியா அணியும் E குழுவில் இரண்டாம் இடம்பெற்ற ஸ்பெயின் அணியும் டென்மார்க்கின் Parken அரங்கில் திங்கட்கிழமை (28) மோதின. 

நடப்புச் சம்பியனை வீழ்த்திய பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு காலிறுதியில்

இரண்டு அணிகளும் சம அளவிலான பலத்துடன் இருந்தாலும், ஸ்பெயின் அணியில் குரோசியாவை விட அதிகமான இளம் வீரர்கள் இருப்பது அவ்வணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.  

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் Pedri மத்திய களத்தில் இருந்து இத்தாலி கோல் காப்பாளர் சிமொனுக்கு பரிமாற்றம் செய்த பந்தை அவர் நிறுத்தத் தவற, பந்து கோலுக்குள் சென்றது. எனவே, ஓன் கோல் முறையில் குரோசிய அணி முன்னிலை பெற்றது. 

எனினும், 38ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான உதையை குரோசிய கோல் காப்பாளர் தடுக்க, மீண்டும் Sarabiaவிடம் வந்த பந்தை அவர் கோலாக்கி முதல் பாதியை தலா ஒரு கோலுடன் நிறைவு செய்ய உதவினார். 

மீண்டும் 57ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் அனுபவ வீரர் Azpilicueta ஹெடர் மூலம் இரண்டாவது கோலைப் பெற, அடுத்த 20 நிமிடங்களின் பின் அவ்வணியின் Torres நீண்ட தூரத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தின்மூலம் அடுத்த கோலையும் போட்டு ஸ்பெயினை 2 கோல்களால் முன்னிலையடையச் செய்தார். 

எனினும், போட்டியின் இறுதி 10 நிமிடங்களில் குரோசிய வீரர்கள் அபாரம் காண்பித்தனர். 85ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையில் தொடர்ச்சியான தடுப்புக்கள் இடம்பெற்ற நிலையில், இறுதியாக Oršic பந்தை கோல் எல்லைக்குள் செலுத்தி குரோசிய அணிக்கான அடுத்த கோலைப் பெற்றார். 

சம்பியன் பட்டத்தினை தக்கவைக்குமா போர்த்துகல்??

மீண்டும் போட்டியின் உபாதையீடு நேரத்தில் எதிரணியின் பகுதியின் ஒரு திசையில் இருந்து உயர்ந்து உள்வந்த பந்தை Pašalić பாய்ந்து ஹெடர் செய்ய ஆட்டம் சமநிலையடைந்தது.

எனவே, போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன்போது போட்டியில் 100 நிமிடங்கள் கடந்த நிலையில் 3 நிமிட இடைவெளியில் ஸ்பெயின் அணி Morata மற்றும் Oyarzabal ஆகியோர் மூலம் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்றது. எனவே, போட்டி நிறைவில் ஸ்பெயின் 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியது. 

முழு நேரம்: குரோசியா 3 – 3 ஸ்பெயின்   

மேலதிக நேர நிறைவில்: குரோசியா 3 – 5 ஸ்பெயின்   

கோல் பெற்றவர்கள் 

  • குரோசியா – Pedri 20′(OG), Oršic 85′, Pašalić 90’+2
  • ஸ்பெயின்  – Sarabia 38′, Azpilicueta 57′, Ferran Torres 77′, Morata 100′, Oyarzabal 103′

பிரான்ஸ் எதிர் சுவிட்சர்லாந்து   

லீக் போட்டிகளின் நிறைவில் F குழுவில் முதலிடம் பிடித்த உலகச் சம்பியன் பிரான்ஸ் குழு A யில் மூன்றாம் இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணியை ரோமானியாவின் Bucharest தேசிய அரங்கில் எதிர்கொண்டது. 

ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் Zuber வழங்கிய பந்தை Seferovic ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தி உலக சம்பியனுக்கு போட்டியின் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். 

5 விநாடிகளில் சந்தையை மாற்றிய RONALDO 

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 8 நிமிடங்களில் பிரான்ஸ் வீரர் எதிரணியின் பின்கள வீரரை பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தியமை VAR மூலம் கண்டறியப்பட்டது. இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது  சுவிட்சர்லாந்து அணியின் Rodríguez உதைந்த பந்தை பிரான்ஸ் கோல் காப்பாளர் Lloris தடுத்தார். 

எனினும், அடுத்த இரண்டு நிமிடங்களில் எம்பாப்பே வழங்கிய பந்தின்மூலம் கரீம் பென்சிமா பிரான்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.  

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் எம்பாப்பே வங்கிய பந்தை கிரீஸ்மன் கோலுக்கு உதைய, எதிரணி கோல் காப்பாளர் Sommerஇன் கைகளில் பட்டவாறு வந்த பந்தை பென்சிமா ஹெடர் செய்து அடுத்த கோலையும் பதிவு செய்து அணியை முன்னிலைப்படுத்தினார். 

மீண்டும், 75 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் உதைந்த பந்து தடுக்கப்பட்டு Pogba விடம் வர, அவர் மத்திய களத்தில் இருந்து வேகமாக பந்தை கோலின் வலது பக்கத்தினால் உயர்த்தி கம்பங்களுக்குள் செலத்தி பிரான்ஸ் அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றார். 

எனினும், தொடர்ந்து வேகமாக ஆடிய சுவிட்சர்லாந்து அணிக்கு, Mbabu உயர்த்தி அனுப்பிய பந்தை Seferovic ஹெடர் செய்ததன் மூலம் இரண்டாவது கோலும் கிடைத்தது. 

மீண்டும் 90ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இருந்து கிடைத்த பந்தினை Gavranović மத்திய களத்தில் இருந்து கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார். 

முதல் போட்டி போன்றே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இடம்பெற்ற இந்தப் போட்டியும் சமநிலையடைந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. இதன்போது பிரான்ஸ் வீரர்கள் அதிகமான வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், எந்த அணியினாலும் கோல்களைப் பெற முடியாமல் போனது. 

மேலதிக நேர நிறைவிலும் போட்டி சமநிலையடைய வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி உதைக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

இதன்போது சுவிட்சர்லாந்து வீரர்கள் முதல் 5 உதைகளையும் கோலாக்கினர். எனினும், பிரான்ஸ் அணியின் ஐந்தாவது உதையாக கிலியன் எம்பாப்பே உதைந்த பந்தை சுவிட்சர்லாந்து கோல் காப்பாளர் Sommer தடுக்க, பெனால்டியில் 5-4 என உலக சம்பியனை வெற்றி கொண்ட சுவிட்சர்லாந்து யூரோ 2020 காலிறுதிக்குத் தகுதி பெற்றது. 

இதனால், சுவிட்சர்லாந்து அணி தமது காலிறுதியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

முழு நேரம்: பிரான்ஸ் 3 – 3 சுவிட்சர்லாந்து  

பெனால்டி முடிவு: பிரான்ஸ் 4 – 5 சுவிட்சர்லாந்து

கோல் பெற்றவர்கள்   

  • பிரான்ஸ் – Benzema 57′ & 59′, Pogba 75′
  • சுவிட்சர்லாந்து  – Seferovic 15′ & 81, Gavranović 90′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<