சம்பியன் பட்டத்தினை தக்கவைக்குமா போர்த்துகல்??

EURO 2020

400

யூரோ கால்பந்து தொடரின் நடப்புச் சம்பியன்களாக இருக்கும் போர்த்துகல் அணி, தமது சம்பியன் பட்டத்தினை தொடர்ந்தும் தக்கவைக்கும் நோக்குடன் 2020ஆம் ஆண்டுக்கான யூரோ கால்பந்து தொடரில் பலமிக்க வீரர்களுடன் களம் காணுகின்றது. 

யூரோ கிண்ண வரலாறு

போர்த்துகல் யூரோ கால்பந்து தொடரில் தமது முதல் சம்பியன் பட்டத்தினை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியினை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பெற்றுக்கொண்டது. அதோடு இதுவே சர்வதேச கால்பந்து அரங்கில் போர்த்துகல் அணி பெற்ற முதல் சம்பியன் பட்டமாகவும் மாறியிருந்தது. 

டென்மார்க் இலகு வெற்றி; ஆஸ்திரியாவை போராடி வென்ற இத்தாலி காலிறுதியில்

இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டில் யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு போர்த்துகல் முன்னேறிய போதும், அப்போது துரதிஷ்டவசமாக அவ்வணி சம்பியன் பட்டத்தினை தமது சொந்த நாட்டில் வைத்தே கிரீஸிடம் பறிகொடுத்திருந்தது. இவை தவிர, போர்த்துகல் 1984, 2000 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தகுதி பெற்றது எவ்வாறு?

2016ஆம் ஆண்டுக்குரிய யூரோ கால்பந்து தொடரின் சம்பியன் பட்டத்தினை வென்றதன் பின்னர், போர்த்துகல் கால்பந்து உலகில் எந்த அணியினையும் தோற்கடிக்கும் பலம் கொண்ட அணிகளில் ஒன்றாக மாறியிருந்தது. எனினும், 2018ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணம் போர்த்துகல் அணிக்கு சிறந்ததாக அமைந்திருக்கவில்லை. பின்னர், முதன் முறையாக நடைபெற்ற 2018/19 பருவகாலத்திற்கான UEFA நேஷன்ஸ் தொடரில் மீண்டும் போர்துகல் அணி சம்பியன் பட்டம் பெற்றுக்கொண்டது. 

இதன் பின்னர் யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிகாண் சுற்றில் போர்த்துகல் அணி எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை. எனினும், போர்த்துகல் அணி குறித்த தகுதிகாண் சுற்றில் குழு B இல் உக்ரைனிற்கு அடுத்தாக இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டதன் காரணமாகவே, யூரோ கிண்ண கால்பந்து தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 

பயிற்றுவிப்பாளர் மற்றும் விளையாடும் விதம் (Manager and Playing Style)

அணி முகாமைத்துவத்திற்கு பெயர் போன பெர்னான்டோ சான்டோஸே ஏழாவது ஆண்டாக இம்முறையும் போர்த்துகல் அணியினை வழிநடாத்துகின்றார். சுமார் மூன்று தசாப்தங்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்றுவிப்பு அனுபவம் கொண்ட சான்டோஸ் தனது அணியின் பலம், பலவீனம் தொடர்பில் திருத்தமான அறிவு கொண்டவராக காணப்படுகின்றார். 

சர்வதேசத்தில் முதல் கிண்ணத்தை கைப்பற்றுமா பெல்ஜியம்?

பொதுவாக 4-2-3-1 என்ற அணிக் கட்டமைப்பில் போர்த்துகல் அணியினை வழிநடாத்தும் சான்டோஸ் தாக்குதல், தடுப்பு என இரண்டு முறைகளிலும் சிறப்பாக செயற்படுகின்ற ஆற்றல் கொண்டவராக காணப்படுகின்றார். சில விமர்சனங்கள் இருந்த போதும் போர்த்துகல் அணியினை முன்னேற்றும் போட்டித்திட்டத்தினை சரியாக வடிவமைப்பதில் சான்டோஸ் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், சான்டோஸின் ஆளுகையில் 86 கால்பந்து போட்டிகளில் விளையாடியிருக்கும் போர்த்துகல் 53 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதோடு 13 போட்டிகளில் மாத்திரமே தோல்வியினைச் சந்தித்திருகின்றது. எனவே, இம்முறைக்கான யூரோ தொடரில் சான்டோஸின் வியூகம் போர்த்துகல் அணிக்கு பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலம், பலவீனம்

போர்துக்கல் அணியினை கடந்த காலங்களில் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் சென்ற வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருவராக இருந்த போதும், போர்த்துகல் அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு முழுவதுமாக அவரினையே நம்பியிருக்க வேண்டிய தேவை ஒன்று இல்லை. ஏனெனில், அவர்கள் சம்பியன் பட்டத்தினை பெற்றுக்கொடுக்க கூடிய சிறந்த அணிக்கட்டமைப்பு ஒன்றுடனேயே காணப்படுகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால், ஒவ்வொரு நிலையிலும் ஆடக்கூடிய சிறந்த வீரர்கள் போர்த்துகல் அணியிடம் காணப்படுகின்றனர். 

அவ்வணியின் முன்வரிசையினை நோக்கும் போது ரொனால்டோ, பெர்னார்டோ சில்வா, ஜோ பீலிக்ஸ், டியகோ ஜோட்டா மற்றும் என்ட்ரே சில்வா என பலம் தர மத்திய வரிசையில் ப்ரூனோ பெர்னான்டஸ், டனிலோ பெரேய்ரா, வில்லியம் கார்வல்கோ, ருபென் நெவஸ் ஆகியோர் பெறுமதி சேர்க்கின்றனர். 

சாதனைகளுக்கு சொந்தக்காரரான மானேயின் மறுபக்கம்

இதேநேரம், ருபென் டயஸ் இல்லாததது முன்னணி தடுப்பு வீரர் பெபே, ஜோஸ் பொன்டஸின் வயது என்பன போர்த்துகல் அணியின் தடுப்பினை சிறிது பலவீனப்படுத்துவது அவ்வணியில் அனைவரும் கவனத்திற்கொள்கின்ற விடயங்களில் ஒன்றாக மாறுகின்றது. இதேவேளை, போர்த்துகல் அணியின் சிறந்த கோல்காப்பாளர் ரூய் பெட்ரிசியோவும் கடந்த இரண்டு பருவங்களிலும் சோபிக்காமல் போனது அவ்வணிக்கு இந்த யூரோ கால்பந்து தொடரின் போது மற்றுமொரு பின்னடைவாக காணப்படும். 

இவ்வாறாக அணியில் சில பின்னடைவான விடயங்கள் இருப்பது பலமிக்க அணிகளை தொடரில் சந்திக்க போர்த்துகல் அணிக்கு சிக்கல்களை உருவாக்கிவிடும் எனக் கருதப்படுகின்றது. 

எதிர்பார்ப்பு வீரர்கள் 

ஜுவன்டஸ் அணிக்காக கழக கால்பந்து தொடர்களில் ஜொலிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவே, இந்த தொடரிலும் போர்த்துகல் அணிக்காக ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார். ரொனால்டோ அண்மையில் நிறைவுக்கு வந்த Serie A கால்பந்து தொடரிலும் 29 கோல்களை போட்டு தனது திறமையினை மீண்டுமொருமுறை நிரூபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலக சம்பியன் பிரான்ஸ்யூரோ கிண்ணத்தை கைப்பற்றுமா?

ரொனால்டோ தவிர அண்மைய கழக கால்பந்து தொடரில் மன்செஸ்டர் யூனைடட் அணிக்காக 24 கோல்களைப் போட்ட ப்ரூனோ பெர்னான்டஸ், மன்செஸ்டர் சிட்டி அணி வீரர் டயஸ், பீலிக்ஸ் சான்ச்சேஸ் போன்றோரும் போர்த்துக்கல் அணியின் ஏனைய எதிர்பார்ப்பு நாயகர்களாக காணப்படுகின்றனர்.  

அணிக்குழாம்

  • Goalkeepers: Anthony Lopes (Lyon), Rui Patricio (Wolves), Rui Silva (Granada) 
  • Defenders: Joao Cancelo (Man City), Nelson Semedo (Wolves), Jose Fonte (Lille), Pepe (Porto), Ruben Dias (Man City), Nuno Mendes (Sporting CP), Raphael Guerreiro (Borussia Dortmund) 
  • Midfielders: Danilo Pereira (PSG), Joao Palhinha (Sporting CP), Ruben Neves (Wolves), Bruno Fernandes (Man Utd), Joao Moutinho (Wolves), Renato Sanches (Lille), Sergio Oliveira (Porto), William Carvalho (Real Betis) 
  • Forwards: Pedro Goncalves (Sporting CP), Andre Silva (Eintracht Frankfurt), Bernardo Silva (Man City), Cristiano Ronaldo (Juventus), Diogo Jota (Liverpool), Goncalo Guedes (Valencia), Joao Felix (Atletico Madrid), Rafa Silva (Benfica) 

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<