19 வயதின் கீழ் மாகாண கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள் விபரம்

2766

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாடு செய்து நடாத்தும் 19 வயதின் கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் விளையாடவுள்ள மாகாண அணிகளின் விபரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அரைச்சதம் கடந்த அபினாஷ், தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்த சென் ஜோன்ஸ்

சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து புதிய திறமைகளை இனம்காணும் நோக்கோடு நடாத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடரில் வடக்கு, கிழக்கு உட்பட மொத்தமாக இலங்கையின் எட்டு மாகாணங்களினை (சப்ரகமுவ தவிர) பிரதிநிதித்துவம் செய்யும் அணிகள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் மாகாணங்கள் 10 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த 10 அணிகளும் A, B என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. இத் தொடரில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு குழுக்களிலும் முதலிடத்தினைப் பெறும் மாகாண அணிகள் ஜூன் 23 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சம்பியன் யார் எனப் பார்ப்பதற்கான பலப்பரீட்சை நடத்தும்

இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் 2017/18 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான பாடசாலை கிரிக்கெட் தொடரிலும், இதற்கென நடாத்தப்பட்ட பயிற்சிப் போட்டிகளிலும் வெளிக்காட்டிய திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதன்படி, வட மாகாண அணியில் அப்பிரதேசங்களில் நடைபெற்ற பாடசாலைப் போட்டித் தொடர்களில் திறமை காட்டிய வீரர்கள் அதிகளவில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மதுசன், இயலரசன் ஆகியோரினையும், சென். ஜோன்ஸ் கல்லூரியின் செளமியன், அபினாஷ் போன்றோரினையும் உதாரணமாக குறிப்பிட முடியும். இவர்கள் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களோடு மட்டுமல்லாது  “வடக்கின் பெரும் சமர்என அழைக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் போட்டியிலும் நல்ல பதிவுகளை காட்டிய அனுபவத்தினை கொண்டிருக்கின்றனர்.

இத் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளாக மேல் மாகாணத்தின் மூன்று அணிகளும், தென் மாகாண அணியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மாகாண அணிகளுக்கு இடையிலான இத்தொடரில் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாண அணிகள் சிறப்பான பதிவுகளை காட்ட எதிர்பார்த்திருக்கின்றன. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்கள் புற்தரை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவத்தினை அதிகம் கொண்டிறாமை அவர்களுக்கு பெரிதும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அடுத்த மாதம் இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம்  மேற்கொள்ளவிருக்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை அணியில் இணைவதற்கு இந்த மாகாண கிரிக்கெட் தொடரானது ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தரவுள்ளது

இத்தொடரின் போட்டிகளை ThePapare.com ஆனது நேரடியாக (Live Broadcast) வழங்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் போட்டிகளை எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து டயலொக் தொலைக்காட்சி சேவையின் அலைவரிசை 1 இலும், டயலொக் MyTV இலும், ThePapare.com இலும் காண முடியும்.

வீரர்கள் குழாம்

தென் மாகாணம்நிப்புன் மாலிங்க (மஹிந்த கல்லூரி), சசித் மனுரங்க (றாகுல கல்லூரி), டிலும் சுதீர (றிச்மண்ட் கல்லூரி), அதித்யா சிறிவர்த்தன (றிச்மண்ட் கல்லூரி), தவீஷ அபிஷேக் (றிச்மண்ட் கல்லூரி), சந்துன் மெண்டிஸ் (றிச்மண்ட் கல்லூரி), திசார டில்சான் (தேவபதிராஜ கல்லூரி), வினுர துல்சார (மஹிந்த கல்லூரி), நவோத் பரணவிதான (மஹிந்த கல்லூரி), கவிந்த சோஹன் (தர்மசோக கல்லூரி), தினுக்க டில்சான் (தர்மசோக கல்லூரி), மிசால் அமோத (புனித தோமியர் கல்லூரி), கவிந்து ராஜபக்ஷ (ஸ்ரீ தேவானந்த கல்லூரி), ரவிஷ்க விஜேயசிரி (றிச்மண்ட் கல்லூரி), சஷிக்க துல்ஷான் (புனித செர்வதியஸ் கல்லூரி)

கபில்ராஜின் போராட்டம் வீண்; திரில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 112ஆவது…

மத்திய மாகாணம்புபுது பண்டார (திரித்துவ கல்லூரி), கசுன் குணவர்த்தன (தர்மராஜ கல்லூரி), கெவின் நிம்சான் (புனித சில்வெஸ்டர் கல்லூரி), கஜித கொடுவேகொட (புனித மரியாள் கல்லூரி), இசுரு பிரபோத (வித்யார்த்த கல்லூரி), துலாஜ் பண்டார (தர்மராஜ கல்லூரி), சானக்க சந்தோஷ் (திரித்துவ கல்லூரி), அபிஷேக் ஆனந்த்குமார் (திரித்துவ கல்லூரி), நவோத்ய இமேஷ் (புனித அந்தோனியர் கல்லூரி), ஒசாந்த ஹேரத் (திரித்துவ கல்லூரி), ருவீன் பீரிஸ் (திரித்துவ கல்லூரி), கல்ஹார செனரத்ன (புனித அந்தோனியர் கல்லூரி), நிம்னக ஜயதிலக்க (புனித அந்தோனியர் கல்லூரி), உபேந்திர வர்ணகுலசூரிய (தர்மராஜ கல்லூரி), மெதுனாக விஜேதிலக்க (வித்யார்த்த கல்லூரி)

மேல் மாகாணம் (தெற்கு) – அஷான் பெர்னாந்து (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி), கமேஷ் நிர்மால் (ஆனந்த கல்லூரி), மொஹமட் சமாஷ் (ஸாஹிரா கல்லூரி), மஹேஷ் தீக்ஷன (புனித பெனடிக்ட் கல்லூரி), பசிந்து உஸ்ஹெட்டி (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி), தில்சார சமிந்த (ஸாஹிரா கல்லூரி), சமிக்க குணசேகர (ஆனந்த கல்லூரி), செஹான் பெர்னாந்து (புனித பெனடிக்ட் கல்லூரி), கெவின் பெரேரா (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி), ரவிந்து பெர்னாந்து (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி), ரோஷேன் பெர்னாந்து (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி), பிரவீன் நிமேஷ் (குருகுல கல்லூரி), அவிஷ்க தரிந்து (புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை),  உகீஷ டில்சான் (தர்மலோக கல்லூரி), ஜனிது ஜயவர்த்தன (ஆனந்த கல்லூரி)

மேல் மாகாணம் (மத்தி) – சந்துஷ் குணத்திலக்க (புனித பேதுரு கல்லூரி), பசிந்து சூரியபண்டார (றோயல் கல்லூரி), கலன பெரேரா (புனித தோமியர் கல்லூரி), டெல்லோன் பீரிஸ் (புனித தோமியர் கல்லூரி), லக்ஷித ரசஞ்சன (நாலந்தா கல்லூரி), காமில் மிஷார (றோயல் கல்லூரி), லக்ஷான் கமகே (புனித ஜோசப் கல்லூரி), திசாருக்க அக்மீமன (வெஸ்லி கல்லூரி), துனித் வெல்லால்கே (புனித ஜோசப் கல்லூரி), ரண்மித் ஜயசேன (புனித பேதுரு கல்லூரி), தெவிந்து செனரத்ன (றோயல் கல்லூரி), சித்தார ஹப்புகின்ன (புனித தோமியர் கல்லூரி), சமிந்து விஜேயசிங்க (நாலந்த கல்லூரி), அஷான் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி), முதித லக்ஷான் (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி), செனால் தங்கல்ல (வெஸ்லி கல்லூரி), கவிந்து மதரசிங்க (றோயல் கல்லூரி), இரங்க ஹேசான் (ஜனாதிபதி கல்லூரி), பசிந்து ருக்ஷான் (விஞ்ஞானக் கல்லூரி)

மேல் மாகாணம் (தெற்கு) – நிஷான் மதுசங்க (மொரட்டு மஹா வித்தியாலயம்), நுவனிது பெர்னாந்து (புனித செபஸ்டியன் கல்லூரி), பிரவீன் கூரே (புனித செபஸ்டியன் கல்லூரி), நிசித்த அபிலாஷ் (புனித செபஸ்டியன் கல்லூரி), தாஷிக் பெரேரா (புனித செபஸ்டியன் கல்லூரி), ஜனுஸ்க பெரேரா (புனித செபஸ்டியன் கல்லூரி), சுவாத் மெண்டிஸ் (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி), கெளமால் நாணயக்கார (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி), ரோஹன் சஞ்சய (களுத்துறை வித்தியாலயம்), சமோத் சந்தரு (பிலியந்தலை மத்திய கல்லூரி), அஷான் டில்ஹார (புனித ஜோன்ஸ் கல்லூரி), தினித் நிம்மான (புனித செபஸ்டியன் கல்லூரி), கோசல ரவிந்து (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்),  பூர்ணா பிரபாத் (ஸ்ரீ சுமங்கல கல்லூரி), அவிஷ்க லக்ஷான் (களுத்துறை வித்தியாலயம்), சசங்க லக்ஷான் (பிலியந்தலை மத்திய கல்லூரி)

வட மாகாணம்S. மதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), N. மோனிக் நிதுஷன் (புனித பத்திரிசியார் கல்லூரி), M. அபினாஷ் (சென். ஜோன்ஸ் கல்லூரி), S. பானுஜன் (கொக்குவில் இந்துக் கல்லூரி), N. செளமியன் (சென். ஜோன்ஸ் கல்லூரி), Y. தினோஷன் (சென். ஜோன்ஸ் கல்லூரி), B. அஜிந்தன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), A. தனுஷன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), S. வரலக்ஷன் (மகாஜன கல்லூரி),  A. ஜெயதர்சன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), R. ராஜ்கிளின்டன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), V. வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), T. விதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), M. கவிலன் (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), K. இயலரசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), A. இவன் ரோசந்தன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

>> காணொளிகளைப் பார்வையிட <<

கிழக்கு மாகாணம்மிதில சரித் (உஹன மகா வித்தியாலயம்/தர்மராஜ கல்லூரி), K. தினுக்ஷன் (கோணெஸ்வரம் இந்து கல்லூரி), கவிந்து லக்ஷித (உஹன மகா வித்தியாலயம்), பசிந்து டில்ஹார (சிங்கள மஹா வித்தியாலயம், திரிகோணமலை), தினேஷ் மதுசங்க (உஹன மகா வித்தியாலயம்), L. ஆகாஷ் (மத்திய கல்லூரி, மட்டக்களப்பு), சனுர டீஷான் (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, அம்பாறை), தேவ திலோக்ஷன் (மத்திய கல்லூரி, மட்டக்களப்பு), பசான் தேவ்மின (உஹன மகா வித்தியாலயம்/திரித்துவ கல்லூரி), J. பிரணாவன் (புனித மைக்கல் கல்லூரி), இஹ்ஸான் ரூஹைம் (அலிகார் கல்லூரி ஏறாவூர்), S. டிருஸ்சான் (மத்திய கல்லூரி, மட்டக்களப்பு), S. நிப்ராஸ் (வெஸ்லி கல்லூரி, கல்முனை), செவோன் நிமந்த (சிங்கள மஹா வித்தியாலயம், அம்பாறை), J. நிர்த்தீஷ் (சிவந்தா கல்லூரி, மட்டக்களப்பு)

வட மேல் மாகாணம்நிபுன் தனன்ஜய (புனித ஜோஸப் வாஸ் கல்லூரி), திலுஸான் ஜயசன்க (புனித மரியாள் கல்லூரி), சுபுன் சுமனரத்ன (மலியதேவ கல்லூரி), ஷோஹான் அனுருத்த (புனித ஜோஸப் வாஸ் கல்லூரி), முடித்த பிரேமதாஸ (மலியதேவ கல்லூரி), யோஹான் பீரிஸ் (புனித ஜோஸப் வாஸ் கல்லூரி), ஷெஹான் உதார (புனித செபஸ்டியன் கல்லூரி, கடுநெரிய), கவின் பண்டார (மலியதேவ கல்லூரி), கவின்து ரனசிங்க (புனித ஏன்ஸ் கல்லூரி), சத்துன் சமோதய (குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி), கனிஷ்க ஹசித (புனித ஜோஸப் வாஸ் கல்லூரி), விடாத் படேபொல (மலியதேவ கல்லூரி), பசிந்து சமிக (புனித ஏன்ஸ் கல்லூரி), ஷெஸான் சில்வா (புனித செபஸ்டியன் கல்லூரி, கடுநெரிய), சித்தும்  அகலங்க (புனித செபஸ்டியன்ஸ் கல்லூரி, கடுநெரிய)

ஊவா மாகாணம்நுவன் சருல,  ரவிந்து தர்ஷன,  சிஹான் கலின்து, சசிந்து மாலக,  திவின் அமரசிங்க,  சேதக தெனுவன்,   ககன சலங்கன,  சிரத் அகலங்க,  சுகித தம்சர, லேஷான் திலக்ஸ , துமின்து இமன்த,  இஷான் சங்கீத்,  சரித்த பபசர,  சமோத்ய ஹன்சக, ரன்டுனு கங்கனாத்

வட மத்திய மாகாணம் அன்ஜன கருணாரத்ன, ஷெஹான் அவன்தய, பிரமில தனன்ஜய, அசங்க குலரத்ன, டமித் சமரவிக்கிரம, சமோத்ய ருவன்வெல்ல, ருசித் சேனாரத்ன, அஷ்மிக இடமல்கொட, அவிஷ்க சேனாதீர, இன்திக திசானாயக்க, திமின்த வீரசிங்க, நிஷல் ஹெட்டியராச்சி, சத்துக விஜேதுங்க, ஷெனெத் பெர்னாந்து, சச்சின்த சன்தீப, சமித் சுபுன்தன, தரிந்து லக்ஷான், இனுக ஏகநாயக்க, முஹம்மட் ஹஸ்னி,  மயூர லக்ஷான்

>> போட்டிகளை நேரடியாகப் பார்வையிட

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<