மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் கொழும்பு அணிக்கு இரண்டாவது வெற்றி

208

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலாக மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (25) நிறைவடைந்தன. இதில் காலி – தம்புள்ளை அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றதோடு கொழும்பு அணி தொடரில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

கொழும்பு எதிர் கண்டி

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சியில் சிறப்பாக செயற்பட்ட கொழும்பு அணி கண்டி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து கொண்டது.

>> T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

கொழும்பு BRC மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆரம்பமான மூன்று நாள் போட்டியின் கடைசி நாளான இன்று கொழும்பு அணிக்கு 215 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் அகீல் இன்ஹாம் மீண்டும் ஒருமுறை தனது நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி கொழும்பு அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். அவர் ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களை பெற்றதோடு ஹிமாஷ லியனகே (65) மற்றும் யசித் உபமான் (54*) ஆகியோரும் அரைச்சதம் பெற்றனர்.

இதன் மூலம் கொழும்பு அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கடந்த வாரம் நடந்த தம்புள்ளைக்கு எதிரான போட்டியில் கொழும்பு அணி இன்னிங்ஸ் வெற்றியை பெறுவதற்கும் அகீல் இன்ஹாம் துடுப்பாட்டத்தில் 83 ஓட்டங்களை பெற்றமை குறப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி முதல் இன்ன்ங்சில் 255 ஓட்டங்களை பெற்றதோடு கொழும்பு அணி தனது முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களை குவித்தது. இதன்போது கொழும்பு அணிக்காக அயன சிறிவர்தன 95 ஓட்டங்களை பெற்று 5 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிஸை ஆரம்பித்த கண்டி அணியின் 7 விக்கெட்டுகளை வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லக்ஷான் பெர்னாண்டோ வீழ்த்த அந்த அணி 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் சுருக்கம்

கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 255 (71.5) – மாதவ நிமேஷ் 92, டிலான் ஜயலத் 46, கிறிஷான் சஞ்சுல 46, கௌமால் நாணயக்கார 5/67, சவிந்து பீரிஸ் 3/46, ஷெஹான் சந்தருவன் 2/52

கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 224 (66) – அயன சிறிவர்தன 95, மாலிங்க அமரசிங்க 26, ஹிமாஷ லியனகே 22, நிம்சர அத்தரகல்ல 3/49, நிமேஷ் மெண்டிஸ் 2/43, டிரோன் சிவகுமார் 2/47, திசரு டில்ஷான் 2/49

கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184 (52) – டீ.எம்.யு. பராக்கிரம 38, திசரு டில்ஷான் 34, தனுக்க தாபரே 32, டிலான் ஜயலத் 27, லக்ஷான் பெர்னாண்டோ 7/50, கௌமால் நாணயக்கார 2/41

கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 216/4 (55.4) – அகீல் இன்ஹாம் 84*, ஹிமாஷ லியனகே 65, யசித் உபமான் 54*, தனுக்க தாபரே 2/25,

முடிவு – கொழும்பு அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


காலி எதிர் தம்புள்ளை

காலி அணியுடனான போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின் தம்புள்ளை அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்டது.

>> தலைமைப் பதவியை இழந்த மெதிவ்ஸின் அதிரடி அறிவிப்பு

பாகொடை இராணுவ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆரம்பமான போட்டியின் கடைசி நாளான இன்று தம்புள்ளை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 215 ஓட்டங்களை பெற வேண்டிய நெருக்கடியுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. எனினும் அந்த அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது 36 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்த்துக் கொண்டது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணிக்கு தினுக்க டில்ஷான் ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களை பெற்று வலுச் சேர்த்தார். இதன் மூலம் காலி அணி முதல் இன்னிங்சுக்காக 347 ஓட்டங்களை பெற்றது.

காலி அணிக்காக தனஞ்சய லக்ஷான் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்றதோடு பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை (முதல் இன்னிங்ஸ்) – 126 (40.2) – கீத் பெரேரா 20, கேஷான் வன்னியாரச்சி 17, அரவிந்த அகுருகொட 17, தனஞ்சய லக்ஷான் 3/23, ஹரீன் புத்தில 3/31, சானுக்க டில்ஷான் 2/22

காலி (முதல் இன்னிங்ஸ்) – 347 (70) – தினுக்க டில்ஷான் 112*, ரமிந்து விஜேசூரிய 78, தனஞ்சய லக்ஷான் 59, ஹரீன் புத்தில 59, லஹிரு டில்ஷான் 21, மிலான் ரத்னாயக்க 4/78, தமித் சில்வா 3/64

தம்புள்ளை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 149/6 (36) – தமித் பெரேரா 26, அசித்த கிஹான் 25, மிலான் ரத்னாயக்க 36, சானுக்க டில்ஷான் 2/47

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<