நியூட்டனின் அபார பந்துவீச்சுடன் இறுதிப்போட்டியில் யாழ். மத்தி!

U19 Schools Cricket Tournament 2023/24

455

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் ஒருநாள் தொடரின் (பிரிவு 2 டியர் B) அரையிறுதிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

அம்பலாங்கொடை பி.எஸ்.டி. குலரத்ன கல்லூரிக்கு எதிரான போட்டியில் ரஞ்சித்குமார் நியூட்டனின் அபார பந்துவீச்சின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது. 

“என்னுடைய பணியின் போது பல கடினமான முடிவுகளை எடுத்தேன்” – பிரமோதய  

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை குலரத்ன கல்லூரிக்கு வழங்கியது. அதன்படி களமிறங்கிய குலரத்ன கல்லூரிக்கு ஆரம்பம் முதல் மத்திய கல்லூரி அழுத்தம் கொடுத்தது. 

அபாரமாக பந்துவீசிய ரஞ்சித்குமார் நியூட்டன் ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை கைப்பற்ற தொடங்கினார். முதல் 3 விக்கெட்டுகளையும் சாய்த்த இவர் இன்னிங்ஸின் நிறைவில் 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்தார். 

நியூட்டனின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாத குலரத்ன கல்லூரி 34.4 ஓவர்கள் நிறைவில் 120 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக மதீஷ துலஞ்சன 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நியூட்டனை அடுத்து சுதர்சன் அனுசாந்த் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி நியூட்டனின் 25 ஓட்டங்களுடன் நேர்த்தியான ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்ல தொடங்கினர். 

இலங்கை கிரிக்கெட் புதிய தேர்வுக்குழு அறிவிப்பு 

இதில் சதாகரன் சிமில்டன் நிதானமாக ஓட்டங்களை (32) பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்செல்ல, மறுமுனையில் களமிறங்கிய அணித்தலைவர் நிசாந்தன் அஜய் 17 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார் 

எனவே 38.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த மத்திய கல்லூரி அணி 124 ஓட்டங்களை பெற்று இலகுவான வெற்றியை உறுதிசெய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பந்துவீச்சில் இனுக டி சில்வா 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார். 

இதேவேளை யாழ். மத்திய கல்லூரி அணி தங்களுடைய இறுதிப்போட்டியில் கொழும்பு அசோக வித்தியாலயத்தை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம் 

பி.எஸ்.டி. குலரத்ன கல்லூரி – 120/10 (34.4), மதீஷ துலஞ்சன 30, ரஞ்சித்குமார் நியூட்டன் 6/29, சுதர்சன் அனுசாந்த் 2/16 

யாழ். மத்தியக் கல்லூரி – 124/5 (38.1), சதாகரன் சிமில்டன் 32, ரஞ்சித்குமார் நியூட்டன் 25, இனுக டி சில்வா 2/18 

முடிவுயாழ். மத்திய கல்லூரி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<