வெஸ்லி கல்லூரியை இலகுவாக வீழ்த்திய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

199

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட டிவிஷன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் இன்று நடைபெற்றன.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 31 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 227 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடைநிறுத்தி வெஸ்லி கல்லூரிக்கு 196 ஓட்டங்களை வெற்றி இலக்கை நிர்ணயித்த போதும் 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த வெஸ்லி கல்லூரி தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 105 (45.4)  ஷெஹான் அவிஷ்க 28, முஹம்மட் உபைதுல்லாஹ் 5/42, ஷேனால் தங்கல்ல 4/35

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 136 (49.4) – ஜனித் சந்தகளும் 28, ஹசித் கீசர 25, ஷேனால் தங்கல்ல 24, கௌமால் நாணயகார 6/44     

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 227/5d (55) -சனோஜ் தர்ஷிக 67, ஷெஹான் அவிஷ்க 46, பிரின்ஸ் பெர்னாண்டோ 45*, தரிந்து பக்மீவேவ 2/30

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 122 (42) – திசுரக அக்மீமன 68, சவிந்து பீரிஸ் 5/56, கௌமால் நாணயக்கார 3/46

முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது


நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித செர்வசியஸ் கல்லூரி, மாத்தறை  

நாலந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும் முதல் இன்னிங்சின் அடிப்படையில் நாலந்த கல்லூரி அணி வெற்றி பெற்றது.

மதுசங்கவின் கன்னி ஹட்ரிக்கோடு முக்கோண ஒரு நாள் தொடரின் சம்பியனான இலங்கை

முதல் இன்னிங்சுக்காக நாலந்த கல்லூரி அணி 194 ஓட்டங்களையும் அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய செர்வசியஸ் கல்லூரி அணி 89 ஓட்டங்களையும் பெற்றது. இதன்படி 105 ஓட்டங்கள் பின்னிலையில் பலோவ் ஒன் (follow on) முறைக்கு தள்ளப்பட்ட புனித செர்வசியஸ் கல்லூரி அணி 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி நாலந்த கல்லூரி அணிக்கு வெற்றி இலக்காக 51 ஓட்டங்கள் நிரணயிக்கப்பட்ட போதிலும் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது நாலந்த கல்லூரி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 194 (70) – ருசிறு டி சில்வா 56*, டில்ஹார பொல்கம்பொல 31, பசிந்து மனுபிரிய 4/62, இசுரு உதயங்க 2/24

புனித செர்வசியஸ் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 89 (43.2) – கேஷான் நுவந்த 28, லக்ஷித ரசாஞ்சன 4/19, மதுஷான் ஹசரங்க 3/35

புனித செர்வசியஸ் கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 155 (70.2) – சுபுன் கவிந்த 46, கேசர நுவந்த 34, ரவீன் டி சில்வா 6/44, கவீஷ் மதுரப்பெரும 3/44

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றதுடன் முதல் இன்னிங்சின்படி நாலந்த கல்லூரி அணி வெற்றி பெற்றது.


பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா எதிர் தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை

கரந்தெனிய மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மாசோக கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பண்டாரநயாக கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி பண்டாரநாயக கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா (முதலாவது இன்னிங்ஸ்) – 469 (104.5) – சிசித மதநாயக்க 102, ஜனிது ஜயவர்தன 80, கயஷான் ஹெட்டியாராச்சி 74, பசிந்து பண்டார 68, தினுக தில்ஷான் 3/68, அகில மென்டிஸ் 2/58