பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இடம்பெறும் சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் மொத்தமாக 6 போட்டிகள் நடைபெற்றன. அதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளதுடன் நாளைய தினம் ஏனைய மூன்று போட்டிகளும் நிறைவடையும்.

வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றாலும், அந்தோனியர் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

முதல் இன்னிங்ஸ் இலக்கான 191 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய நாலந்த கல்லூரி, 48 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் தோல்வியுற்றது. சிறப்பாகத் துடுப்பாடிய எறங்க மதுஷான் 59 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார்.

விமுக்தியின் பந்து வீச்சில் சிக்குண்ட பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

பின்னர், 3௦ ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய அந்தோனியர் கல்லூரி 61.4 ஓவர்களுக்கு 107 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது. தசுன் செனவிரத்ன 37 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

போட்டியின் சுருக்கம்

அந்தோனியர் கல்லூரி: 191 (66.5) – எறங்க மதுஷான் 59, அவிஷ்க தறிந்து 33, ருக்ஷான் ரொட்ரிகோ 22, அசெல் குலதுங்க 4/34, லக்ஷித ரசன்ஜன 2/38, தசுன் செனவிரத்ன 2/30

நாலந்த கல்லூரி: 161 (48) – சுயன்க விஜவர்தன 35, கசுன் சந்தருவன் 31, மலிங்க அமரசிங்க 28, அவிஷ்க பெரேரா 21, கவிந்து மதுக்க 3/33, கவீஷ 3/21, அவிஷ்க தரிந்து 2/26

அந்தோனியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 107 (61.4) – ருக்ஷன் ரொட்ரிகோ 26, அவிஷ்க தறிந்து 36, தசுன் செனவிரத்ன 4/37, அசெல் குலதுங்க கமகே 2/25, உமேஷ்க தில்ஷன் 2/02

போட்டி முடிவு: போட்டி சமநிலையில் நிறைவுற்றது. வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி


லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ

இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் விமுக்தி குலதுங்கவின் அதிரடிப் பந்து வீச்சினால் லும்பினி கல்லூரி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

94 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி விமுக்தி குலதுங்கவின் சிறந்த பந்து வீச்சினால் 97 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதன் பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய லும்பினி கல்லூரி 26.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட நிலையில் 11 ஓட்டங்களால் பின்னிலையுற்றது.

எனினும் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்த விமுக்தி குலதுங்க 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்த வெறும் 80 ஓட்டங்களுக்கு அவவ்வணி சுருண்டது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லும்பினி கல்லூரி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இரண்டாவது இன்னிங்சுக்காக சிறப்பாக துடுப்பாடிய ரவிந்து சஞ்சீவ ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார் .

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி: 97 (62) – அவிந்து பெர்னாண்டோ 27, விமுக்தி குலதுங்க 4/32, தனுக்க தாபரே 3/17, வினு ஹேமால் 2/10

லும்பினி கல்லூரி: (26.2) – தனுக்க தாபரே 30, சஞ்சய பெர்னாண்டோ 3/19, திலன் நிமேஷ் 3/26, சவிந்து பீரிஸ் 2/13

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி,மொரட்டுவ (இரண்டாம் இன்னிங்ஸ்): 80 (40.3) – திலங்க மதுரங்க 24, விமுக்தி குலதுங்க 6/27, தனுக்க தாபேர 2 / 33, கனிஷ்க மதுவந்த 2/15

லும்பினி கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 94/3 (18.2) – ரவிந்து சஞ்சீவ 52 *, அமித தாபரே 18 *, திலன் நிமேஷ் 2/43

போட்டி முடிவு : கொழும்பு, லும்பினி கல்லூரி 7 விக்கெட்டுகளால் வெற்றி!


டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் மொறட்டுவ வித்தியாலயம்

முதல் இன்னிங்ஸ் இலக்கான 217 ஓட்டங்களை விட அதிக ஓட்டங்களைப் பெறும் நோக்கோடு களமிறங்கிய மொறட்டுவ வித்தியாலயம் இன்றைய தினம் ஜீவந்த பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 83 ஓட்டங்களுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு முதல் இன்னிங்ஸ் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

சேனநாயக்க கல்லூரியின் முதல் இன்னிங்சின்போது, அவ்வணி சார்பாக சேஹாத் அமீன் சதம் விளாசி, ஆட்டமிழக்காமல் 1௦5 ஓட்டங்களை பெற்றார். நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

டி.எ.ஸ் சேனநாயக்க கல்லூரி: 217/9d (76.1) – சேஹாத் அமீன் 105*, நேத்சித் ஜயமான்ன 47, ரஷான் கவிஷ்க 4/86

மொறட்டுவ வித்தியாலயம்: 246/6 (56) – இஷான் மதுஷங்க 87, ஜீவந்த பெர்னாண்டோ 83*, சினேத் உதயங்க 33, முதித்த லக்க்ஷான் 3/100


புனித செபஸ்டியன் கல்லூரி, மொறட்டுவ எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செபஸ்டியன் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி, டேமியன் பய்சரின் அரைச் சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய டேமியன் பய்சர் 59 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார்.

முதல் இன்னிங்ஸ் இலக்கான 233 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி 2௦ ஓவர்களுக்குள் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. தஷிக் பெரேரா தனது அதிரடி பந்து வீச்சின் மூலம் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி: 233 (68,2) – டேமியன் பய்சர் 59, மலிந்த பீரிஸ் 45, ரொசான் பெர்னாண்டோ 36, கவீஷ ஜயதிலக 4/68, மகேஷ் தீக்ஷன 5/51

புனித பெனடிக்ட் கல்லூரி: 45/5 (20) – தஷிக் பெரேரா 4/26


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி

கட்டுனேரிய புனித செபஸ்டியன் மைதானத்தில் முதல் சுற்றுப் போட்டிகளுக்காக D பிரிவில் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, அஷான் பெர்னாண்டோ மற்றும் ரவிந்து பெர்னாண்டோ ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 407 ஓட்டங்களைக் குவித்து மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

பின்னர் களமிறங்கிய மலியதேவ கல்லூரி அணி 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் நிறைவிற்கு வந்தது. எனவே அவ்வணி, 321 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் காணப்படுகிறது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி: 407/7d (74) – அஷான் பெர்னாண்டோ 117, ரவிந்து பெர்னாண்டோ 117, லசித் க்ரூஸ்புள்ளே 52, சசிந்து கொலம்பகே 41, ரொஷான் பெர்னாண்டோ 33, கவீன் பண்டார 4/72, தமித சில்வா 2/106

மலியதேவ கல்லூரி, குருநாகல் : 86/2 (19)


புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரியின் அபார பந்து வீச்சினால் 34.1 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பின்னர் களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி அணியினர் இன்றைய நாள் ஆட்டம் நிறைவிற்கு வரும்பொழுது, 6 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணியின் சரண அரைச் சதம் கடந்திருந்தார்.

அபாரமாக பந்து வீசிய தனஞ்சய பெரேரா 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் 141 ஓட்டங்களால் முன்னிலை பெற்று மிகவும் வலுவான நிலையில் தர்ஸ்டன் கல்லூரி அணி இருக்கிறது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ஜோசப் வாஸ் கல்லூரி: 82(34.1) – அஞ்சன ருக்மல்19, சரண நாணயக்கார 6/27, அயேஷ் ஹர்ஷன் 3/13

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு: 223/6 (56) – சரண நாணயக்கார 67, நவோத் சமரக்கோன் 44 *, இமேஷ் விரங்க 54, சவான் பிரபாஷ் 39, தனஞ்சய பெரேரா 4/65, செர்ஹாரா ரணதுங்க 2/56