300 விக்கெட் மைல்கல்லை எட்டிய பிரபாத் ஜயசூரிய

SLC Major League Tournament 2022

168
SLC Major League Tournament 2022

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஆறாவது வாரத்துக்கான 12 போட்டிகள் நேற்று (23) ஆரம்பமாகின.

இதில் முவர்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் எஸ்எஸ்சி கழக வீரர் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை அவர் பூர்த்தி செய்தார். இதுவரை 71 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபாத், 24 தடவைகள் 5 விக்கெட் பிரிதிகளையும், 7 தடவைகள் 10 விக்கெட் குவியலையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, Ace Capital கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் 22 வயது சுழல் பந்துவீச்சாளரான கௌமால் நாணயக்கார 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டகளையும், களுத்துறை நகர கழகத்துக்கு எதிரான போட்டியில் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 26 வயது சுழல் பந்துவீச்சாளரான தரிந்து ரத்நாயக 78 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 48 விக்கெட்டுகளுடன் கௌமால் நாணயக்கார முதலிடத்திலும், 38 விக்கெட்டுகளுடன் தரிந்து ரத்நாயக 2ஆவது இடத்திலும் உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற 12 போட்டிகளில் ஒன்பது சதங்களும், பதின்மூன்று அரைச் சதங்களும் பதிவாகின. இதில் முவர்ஸ் கழகத்தின் பசிந்து சூரியபண்டார (123), சிலாபம் மேரியன்ஸ் கழகத்தின் விஷ்வ சதுரங்க (172) மற்றும் கசுன் விதுர (113), கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் மினோத் பானுக (105), லங்கன் கிரிக்கெட் கழகத்தின் தேஷான்

டயஸ் (130) மற்றும் பிரசங்க ஜயமான்ன (138), இராணுவ விளையாட்டுக் கழகத்தின் மிஷேன் சில்வா (102), கண்டி சுங்க கிரிக்கெட் கழகத்தின் விஷ்வ உதார (102) மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் ரவிந்து பெர்னாண்டோ (105) ஆகிய வீரர்கள் சதமடித்து அசத்தியிருந்தனர்.

அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (24) நடைபெறவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 355/8 (90) – மினோத் பானுக 105, கமிந்து மெண்டிஸ் 82, நிமேஷ குணசிங்க 61, லசித் அபேரட்ன 48, அசித வன்னிநாயகே 3/64, சகிந்து விஜேரட்ன 3/92

BRC கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 323/3 (91) – ப்ரசன்ன ஜயமான்ன 138*. தேஷான் டயஸ் 130, கீத் குமார 36

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 356 (80.2) – மிஷேன் சில்வா 102, ரொஸ்கோ தட்டில் 71, சுபேஷல ஜயதிலக 57, ரனித லியனாரச்சி 3/33, கைசர் அஷ்ரப் 2/59

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 8/1 (7)

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 315/8 (89.2) – தனன்ஜய லக்ஷான் 79, ஹஷான் துமிந்து 75, அவிஷ்க பெரேரா 53, துனித் வெல்லாலகே 34, நளின் ப்ரியதர்ஷன 4/108, சுபுன் மதுஷங்க 2/60

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 321 (87.3) – விஷ்வ விஜேரட்ன 102*, இமேஷ் உதயங்க 67, இரோஷ் சமரசூரிய 39, ஜனித் லியனகே 3/54, ஹரீன் ரத்னமுதலி 2/39

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் NCC கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 129 (54.2) – சுபுன் லீலாரத்ன 45, வினோத் பெரேரா 20, சஹன் ஆரச்சிகே 3/23, லசித் எம்புல்தெனிய 3/45, அஷைன் டேனியல் 2/14

NCC கழகம் – 130/3 (38.5) – வினுக ரூபசிங்க 66*, கவின் பண்டார 23

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 232/7 (90) – சிதார கிம்ஹான் 82*, நவிந்து விதானகே 34, துஷான் விமுக்தி 20, லஹிரு கமகே 2/38, அனுக் பெர்னாண்டோ 2/29

களுத்துறை நகர கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 210 (63.2) – சுகித மனோஜ் 49, தினெத் முனசிங்க 30, சவன் கங்கானம்கே 28, தரிந்து ரத்நாயக 6/78

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 102/3 (30) – விமுத் சப்னக 31*, லொஹான் டி சொய்ஸா 28

முவர்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

முவர்ஸ் கிரிக்கெட் கழகம் – 336/5 (90) – பசிந்து சூரியபண்டார 123*, சொஹான் டி லிவேரா 70, கவிந்து குலசேகர 39, பபசர வதுகே 38, நிசல தாரக 2/65, பிரபாத் ஜயசூரிய 2/85

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 348/7 (90) – ரவிந்து பெர்னாண்டோ 105, ரொன் சந்திரகுப்த 70, திலும் சுதீர 50*, நவோத் பரணவிதான 46, கமேஷ் நிர்மால் 40, உபுல் இந்திரசிறி 3/101

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் Ace Capital கிரிக்கெட் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 133 (47.4) – செஹாத சொய்ஸா 39, மஹேஷ் குமார 21, லக்ஷான் ரொட்றிகோ 18, லசித் க்ரூஸ்புள்ளே 3/13, வனுஜ சஹன் 2/23, நிம்சர அத்தரகல்ல 2/33

Ace Capital கிரிக்கெட் கழகம் – 82 (20) – ஓசத பெர்னாண்டோ 22, கௌமால் நாணயக்கார 6/33, ஹஷான் சந்தீப 3/30

இராணுவ விளையாட்டுக் கழகம் – 46/3 (14) – துலின டில்ஷான் 30*

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 367/4 (90) – விஷ்வ சதுரங்க 172, கசுன் விதுர 113, மதுக லியனபத்திரனகே 2/107

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<