Home Tamil மே.தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இலங்கை

மே.தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இலங்கை

ICC U19 World Cup 2022

2031
ICC

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் D குழுவில் பங்குபற்றும் இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 3 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது.

ஏற்கனவே ஸ்கொட்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை வீழ்த்தியிருந்த இலங்கை அணி, ஹெட்ரிக் வெற்றியோடு 6 ஆண்டுகளுக்குப் பிறகு இளையோர் உலகக் கிண்ண காலிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இலங்கை அணி தனது கடைசி லீக் போட்டியில் போட்டி ஏற்பாடு நாடான மேற்கிந்தியத் தீவுகள் அணியை நேற்று (21) எதிர்கொண்டது.

செய்ன்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸின் பெஸ்ஸட்ரேவில் நடைபெற்ற தீர்மானமிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகே முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப வீரர்களான மத்தியூ நண்டு (7) மற்றும் சக்கி பார்ரஸ் (16) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கெவின் விக்கமும், டெட்டி பிஸொப்பும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுச்சேர்த்தனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 102 ஓட்டங்களாக இருந்தபோது டெட்டி பிஸொப் 45 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த ஜோர்டன் ஜொன்சன், கெவின் விக்கமுடன் இணைந்து மற்றுமொரு அரைச்சத இணைப்பட்டத்தை மேற்கொண்டனர். இதில் கெவின் விக்கம் 91 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, ஜோர்டன் ஜொன்சன் 3 ஓட்டங்களால் அரைச்சதத்தை தவறவிட்டு 56 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்து ஓய்வறை திரும்பினார்.

எனினும், பின்வரிசையில் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், விக்கெட் காப்பு துடுப்hட்ட வீரர் ரிவால்டோ கிளார்க் நிதானமாக ஆடி 45 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் 19 வயதின்கீழ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டஙகளைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

பின்னர் 251 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, 48.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை எடுத்து 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஆரம்பத்தில் 4 ஓட்டங்களுக்கு சமிந்து விக்ரமசிங்கவின் விக்கெட்டினை இழந்து இலங்கை அணி தடுமாறிய போதும், ஷெவோன் டேனியல் மற்றும் சதீஷ ராஜபக்ஷ சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர்.

இரண்டாவது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், ஷெவோன் டேனியல் 34 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய சகுன நிதர்ஷன லியனகே 9 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

எனினும், அடுத்ததாக களமிறங்கிய அன்ஞல பண்டார, சதீஷ ராஜபக்ஷவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

இதில் அன்ஞல பண்டார 52 பந்துகளில் 40 ஓட்டங்களையும், சதீஷ ராஜபக்ஷ 115 பந்துகளில் 76 ஓட்டங்களை விளாசி, அணியை சிறந்த நிலைக்கு அழைத்துச்சென்று ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த அணித்தலைவர் துனித் வெல்லாலகே (15), ரவீன் டி சில்வா (13) மற்றும் ரனுத சோமரத்ன (28) ஆகியோரது பங்களிப்புடன் இலங்கை அணி வெற்றியிலக்கை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் மெக்கெனி கிளார்க் மற்றும் இஷை தோர்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து, D குழுவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றது.

இறுதியாக இலங்கை அணி, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடரில் காலிறுதி சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த பிரிவில் அவுஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேற, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.


Result


Sri Lanka U19
251/7 (48.2)

West Indies U19
250/9 (50)

Batsmen R B 4s 6s SR
Shaqkere Parris b Dulith Wellalage 16 29 2 0 55.17
Matthew Nandu lbw b Matheesha Pathirana 7 12 0 0 58.33
Teddy Bishop Treveen Mathews b Dulith Wellalage 45 62 7 0 72.58
Kevin Wickham c Chamindu Wickramasinghe b Matheesha Pathirana 56 91 5 1 61.54
Jordan Johnson c Sadisha Rajapaksa b Dunith Wellalage 47 56 4 1 83.93
Rivaldo Clarke † run out (Anjala Bandara) 45 35 2 4 128.57
Giovonte Depeiza run out (Anjala Bandara) 0 2 0 0 0.00
Nathan Edwards run out (Matheesha Pathirana) 1 2 0 0 50.00
McKenny Clarke b Matheesha Pathirana 21 12 1 2 175.00


Extras 12 (b 0 , lb 1 , nb 1, w 10, pen 0)
Total 250/9 (50 Overs, RR: 5)
Fall of Wickets 1-20 (5.2) Matthew Nandu, 2-34 (8.2) Shaqkere Parris, 3-102 (26.3) Teddy Bishop, 4-160 (37.4) Kevin Wickham, 5-194 (44.3) Jordan Johnson, 6-194 (44.5) Giovonte Depeiza, 7-202 (45.5) Nathan Edwards, 8-248 (49.5) Rivaldo Clarke †, 9-250 (49.6) McKenny Clarke,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 3 0 19 0 6.33
Treveen Mathews 9 2 38 1 4.22
Chamindu Wickramasinghe 1 0 4 0 4.00
Dunith Wellalage 10 2 39 3 3.90
Matheesha Pathirana 10 0 67 2 6.70
Shevon Daniel 7 0 28 0 4.00
Raveen De Silva 6 0 36 0 6.00
Sadisha Rajapaksa 4 0 18 0 4.50


Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c McKenny Clarke b Nathan Edwards 4 5 0 0 80.00
Sadisha Rajapaksa lbw b Isai Thorne 76 115 5 0 66.09
Shevon Daniel c Rivaldo Clarke † b McKenny Clarke 34 33 5 1 103.03
Sakuna Nidarshana Liyanage c Rivaldo Clarke † b Giovonte Depeiza 9 22 1 0 40.91
Anjala Bandara c Rivaldo Clarke † b Isai Thorne 40 52 2 1 76.92
Dunith Wellalage c & b 15 15 0 0 100.00
Ranuda Somarathne not out 28 27 0 0 103.70
Raveen De Silva b 13 14 0 0 92.86
Yasiru Rodrigo not out 6 9 0 0 66.67


Extras 26 (b 6 , lb 3 , nb 2, w 15, pen 0)
Total 251/7 (48.2 Overs, RR: 5.19)
Fall of Wickets 1-4 (0.5) Chamindu Wickramasinghe, 2-56 (11.4) Shevon Daniel, 3-96 (19.6) Sakuna Nidarshana Liyanage, 4-174 (35.2) Anjala Bandara, 5-199 (39.4) Sadisha Rajapaksa,

Bowling O M R W Econ
Nathan Edwards 10 1 50 1 5.00
Shiva Sankar 8 0 50 1 6.25
McKenny Clarke 9.2 2 38 1 4.13
Matthew Nandu 5 0 18 0 3.60
Giovonte Depeiza 5 0 32 1 6.40
Isai Thorne 10 0 41 2 4.10
Kevin Wickham 1 0 10 0 10.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<