Home Tamil துனித்தின் சகலதுறை ஆட்டத்தால் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை

துனித்தின் சகலதுறை ஆட்டத்தால் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை

ICC U19 World Cup 2022

3870

அணித் தலைவர் துனித் வெல்லாலகே பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய அதிசிறந்த திறமையின் உதவியுடன் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் தனது இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளால் இலங்கை அணி அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை ஈட்டிய இலங்கை அணி, D குழுவில் முதலிடத்தைப் பிடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 4ஆவது நாளான நேற்று (17) சென்ட். கைட்ஸில் உள்ள பசெட்டெரே விளையாட்டரங்கில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதின்கீழ் அணித்தலைவர் துனித் வெல்லாலகே முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

ஆதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணி, தமது முதல் விக்கெட்டினை 12 ஓட்டங்களுக்கு இழந்தது.

ஆரம்ப வீரர் டீக் வைலி 6 ஓட்டங்களுடனும், ஐசெக் ஹிக்கின்ஸ் 15 ஓட்டங்களுடனும் ட்ரவீன் மெதிவ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த அணித்தலைவர் கூப்பர் கொன்னலி சதீஷ ராஜபக்ஷவின் பந்துவீச்சில் 3 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், ஆரம்ப வீரர் கெம்பல் கெல்லவே மற்றும் நிவேதன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிதானமான இணைப்பாட்டத்தை பகிர்ந்து அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 46 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இதில் அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணிக்காக அரைச்சதமடித்து நம்பிக்கை கொடுத்த கெம்பல் கெல்லவே, 77 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்த நிலையில், துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஆட்டமிந்தார்.

இதனையடுத்து நிவேதன் ராதாகிருஷ்ணன் 21 ஓட்டங்களுடன் மீண்டும் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, பின்வரிசை வீரர்களும் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறி விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்

இதனால் அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் துனித் வெல்லாலகே தனது மாயஜால சுழல் மூலம் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து பல சாதனைகளை முறியடித்தார்.

அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணித்தலைவராகவும், 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்ட இரண்டாவது பந்துவீச்சாளராகவும் துனித் வெல்லாலகே இடம்பிடித்தார்.

அதுமாத்திரமின்றி, 19 வயதின்கீழ் உலகக் கிண்ண தொடர் ஒன்றில் 2 தடவைகள் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவிச்சாளராகவும் அவர் சாதனை படைத்தார்.

எனவே, 34 ஆண்டுகால 19 வயதின்கீழ் உலகக் கிண்ண வரலாற்றில் இவ்வாறான சாதனையை நிகழ்த்திய முதலாவது வீரராகவும் அவர் புதிய வரலாறு படைத்தார்.

மேலும், இம்முறை ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் துனித் வெல்லாலகே பெற்றுக்கொண்டார்.

மறுபுறத்தில் ட்ர்வீன் மெதிவ் மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட் வீதமும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின்கீழ் அணியின் ஆரம்ப வீரர்களாக சமிந்து விக்ரமசிங்க, ஷெவோன் டேனியல் ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில் ஷெவோன் டேனியல் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சமிந்து விக்ரமசிங்க 19 ஓட்டங்களுடனும், அடுத்த வந்த சதீஷ ராஜபக்ஷ 8 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டழிழந்து ஓய்வறை திரும்பினர்.

தொடர்ந்து புதிய வீரராக மைதானம் வந்த சகுன நிதர்ஷன லியனகே 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை 19 வயதின்கீழ் அணி 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் துனித் வெல்லாலகே மற்றும் அஞ்சல பண்டார ஆகியோர் 70 ஓட்டங்களை பகிர்ந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதில் அஞ்சல பண்டார 47 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரனுத சோமரத்னவுடன் இணைந்து துனித் வெல்லாலகே மீண்டுமொரு அரைச்சத இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பி ஓட்டங்களைக் குவித்தனர்.

குறிப்பாக 6ஆவது விக்கெட்டுக்காக இவர்கள் 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இலங்கை அணியின் வெற்றியிலக்கை இலகுவாக்க, அணித்தலைவர் துனித் வெல்லாலகே 52 ஓட்டங்களை பெற்ற நிலையில், வெற்றியிலக்கை அடைய 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரனுத சோமரத்ன (32) மற்றும் ரவீன் டி சில்வா (6) ஆகியோர் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, டொம் வைட்னி மற்றும் ஜோஸுஆ கார்னர் ஆகியார் தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

எனவே, இலங்கை 19 வயதின்கீழ் அணி 37 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் இலங்கை அணி நான்கு புள்ளிகளை எடுத்து D குழுவில் முதலிடத்தைப் பெற்று காலிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளையோர் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் குவியலுடன், அரைச்சதம் கடந்த  முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட துனித் வெல்லாலகே போட்டியின் ஆட்டநாயகனாத் தெரிவாகினார்.

இதனிடையே, இரண்டு வெற்றிகளுடன் இளையோர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள இலங்கை அணி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் அணி – 175/10 (50) – கெம்பல் கெல்லவே 54, வில்லியம் சல்ஸ்மேன் 22, துனித் வெல்லாலகே 5/28, ட்ரவீன் மெதிவ் 2/32, மதீஷ பத்திரன 2/34

இலங்கை 19 வயதின்கீழ் அணி – 177/6 (37) – துனித் வெல்லாலகே 52, அஞ்சல பண்டார 33, ரனுத சோமரத்ன 32*, ஜோஸுஆ கார்னர் 2/21, டொம் வைட்னி 2/29

முடிவு – இலங்கை 19 வயதின்கீழ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<


Result


Sri Lanka U19
177/6 (37)

Australia U19
175/10 (50)

Batsmen R B 4s 6s SR
Campbell Kellaway lbw b Dunith Wellalage 54 77 5 1 70.13
Teague Wyllie c Ranuda Somarathne b Treveen Mathew 6 10 1 0 60.00
Isaac Higgins c Ranuda Somarathne b Treveen Mathew 15 38 1 0 39.47
Cooper Connolly b Sadisha Rajapaksa 3 14 0 0 21.43
Nivethan Radhakrishnan b Dunith Wellalage 21 36 2 0 58.33
Tobias Snell b Matheesha Pathirana 19 51 0 0 37.25
Aidan Cahill b Dulith Wellalage 0 2 0 0 0.00
William Salzmann b Dulith Wellalage 22 50 1 0 44.00
Joshua Garner c Yasiru Rodrigo b Matheesha Pathirana 12 19 1 0 63.16
Tom Whitney c Chamindu Wickramasinghe b Dulith Wellalage 1 2 0 0 50.00
Harkirat Bajwa not out 1 2 0 0 50.00


Extras 21 (b 1 , lb 6 , nb 2, w 12, pen 0)
Total 175/10 (50 Overs, RR: 3.5)
Fall of Wickets 1-12 (3.1) Teague Wyllie, 2-46 (13.2) Isaac Higgins, 3-61 (18.1) Cooper Connolly, 4-107 (28.2) Campbell Kellaway, 5-112 (30.1) Nivethan Radhakrishnan, 6-112 (30.3) Aidan Cahill, 7-143 (43.5) Tobias Snell, 8-167 (48.2) William Salzmann, 9-169 (48.6) Tom Whitney, 10-175 (49.6) Joshua Garner,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 5 0 18 0 3.60
Treveen Mathews 10 1 32 2 3.20
Matheesha Pathirana 8 0 34 2 4.25
Chamindu Wickramasinghe 3 1 11 0 3.67
Sadisha Rajapaksa 6 1 30 1 5.00
Dunith Wellalage 10 1 28 5 2.80
Shevon Daniel 6 1 10 0 1.67
Raveen De Silva 2 0 5 0 2.50


Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Cooper Connolly b Joshua Garner 19 24 3 0 79.17
Shevon Daniel c Aidan Cahill b William Salzmann 9 10 1 0 90.00
Sadisha Rajapaksa b Tom Whitney 8 11 0 0 72.73
Sakuna Nidarshana Liyanage hit-wicket b Nivethan Radhakrishnan 7 23 0 0 30.43
Dunith Wellalage c & b Tom Whitney 52 71 4 1 73.24
Anjala Bandara c Tobias Snell b Joshua Garner 33 47 2 0 70.21
Ranuda Somarathne not out 32 35 4 0 91.43
Raveen De Silva not out 6 4 1 0 150.00


Extras 11 (b 0 , lb 1 , nb 3, w 7, pen 0)
Total 177/6 (37 Overs, RR: 4.78)
Fall of Wickets 1-15 (3.3) Shevon Daniel, 2-40 (6.5) Chamindu Wickramasinghe, 3-41 (7.1) Sadisha Rajapaksa, 4-49 (12.5) Sakuna Nidarshana Liyanage, 5-119 (27.1) Anjala Bandara, 6-171 (36.2) Dunith Wellalage,

Bowling O M R W Econ
Tom Whitney 10 1 39 2 3.90
William Salzmann 7 0 39 1 5.57
Joshua Garner 4 0 21 2 5.25
Nivethan Radhakrishnan 7 1 40 1 5.71
Harkirat Bajwa 4 0 15 0 3.75
Cooper Connolly 5 0 22 0 4.40