இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று

121

இலங்கை கிரிக்கெட் அணியினுடைய இளம் வீரர்களான தனன்ஞய லக்ஷான், மற்றும் இஷான் ஜயரட்ன ஆகியோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாந்துவுடன் நேரடியான தொடர்புகளை பேணியதன் காரணமாகவே, இந்த இரண்டு வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கின்றது.  

பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்ட அவிஷ்க!

இம்மாத நடுப்பகுதியில் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற இலங்கை கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. 

இந்த ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கையின் உத்தேச அணியில் பெயரிடப்பட்டிருந்த ஷிரான் பெர்னாந்துவே கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியிருப்பதோடு,  அவரினைத் தொடர்ந்து தற்போது சகலதுறை வீரர்களான தனன்ஞய லக்ஷான் மற்றும் இஷான் ஜயரட்ன ஆகியோருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கின்றது. 

IPL ஐ நடத்த இங்கிலாந்து கவுண்டி அணிகள் ஆர்வம்

இதேநேரம், வைரஸ் தொற்றுக்கு இலக்கான வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) ஒருநாள் சுபர் லீக்கினுள் அடங்கும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 23ஆம் திகதி டாக்காவில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…